இது டயாபட்டிஸ் நோயாளிகளுக்கு உதவக் கூடும்! முயற்சி செய்து பாருங்கள்!
By ஸ்ரீ | Published On : 30th May 2018 12:37 PM | Last Updated : 30th May 2018 12:37 PM | அ+அ அ- |

விதவிதமான ருசியான உணவு வகைகளை தயார் செய்து சாப்பிட வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால், அதை செய்வதற்கு நேரம் இருக்காது. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஓட்டலில் வாங்கி கட்டுபடியும் ஆகாது. எனவே, நாம் வீட்டில் இருந்தபடியே தோசை மிக்ஸ், சத்து மாவு, பொங்கல் மிக்ஸ், திடீர் புட்டு, தோசை மிக்ஸ், இட்லி மிக்ஸ், ரவா தோசை மிக்ஸ், இடியாப்ப மிக்ஸ், பாதாம் மிக்ஸ், பாயசம் மிக்ஸ், மசாலா பொடி வகைகள் மற்றும் சாம்பார் பொடி, ரசப்பொடி, என பல வகையான ரெடிமிக்ஸ்களை தயார் செய்து விற்பனை செய்யலாம். இவை அனைத்தும் ஈரப்பதம் இல்லாமல் செய்வதால் எளிதில் கெடாது. இதற்கு பதப்படுத்தும் பொருளும் ஏதும் சேர்க்க வேண்டாம்.
இதையே சற்று வித்தியாசமாக செய்தால் வரவேற்பு கூடுதலாக இருக்கும். அதாவது மூலிகைப் பொடி வகைகளான, புளியம் இலைப் பொடி, எலுமிச்சை இலைப் பொடி, வேப்பம் பூ பொடி, கொள்ளுப் பொடி, ஆவாரை இலைப் பொடி என பல்வேறு மூலிகைப் பொடி வகைகளை தயார் செய்யலாம்.
டயாபட்டிக் உணவு: இது சிறுதானியத்தில் செய்யக் கூடியது. வரகு பொங்கல் மிக்ஸ், முத்து சோள ரொட்டி மிக்ஸ், கம்பு தோசை மிக்ஸ், கேழ்வரகு இட்லி மிக்ஸ் நவதானிய அடை மிக்ஸ் என பலவகையான டயாபட்டிக் ரெடி மிக்ஸ்களை தயாரித்து விற்பனை செய்யலாம். இது டயாபட்டிக் உள்ளவர்களுக்கு மட்டும் இல்லாமல் அனைவரும் சாப்பிட நல்ல தரமான உணவு பொருளாகும்.