தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

இதை சாப்பிட்டால் உடல் சூட்டினால் ஏற்படும் குறைபாடு உடனே நீங்கும்

புடலங்காயில் வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம்

News image
Updated On :13 பிப்ரவரி 2019, 11:01 am IST

காய் :  புடலங்காய்  பச்சடி

சத்துக்கள் : புடலங்காயில் வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன. மேலும் இக்காய் அதிக அளவு நார்சத்து, புரதம், குறைந்த அளவு எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

புடலங்காய் தோல் விதையுடன் (200  கிராம்) , சாம்பார் வெங்காயம் (3), மிளகுத் தூள் (தேவைக்கேற்ப), கொத்தமல்லித் தழை (1கைப்பிடி), எலுமிச்சம் பழச்சாறு தோலோடு (1 பழம்), தயிர் (100 மி.லி).

செய்முறை
 
முதலில் புடலங்காயை சுத்தம் செய்து (தோல், சதை, விதையோடு) சிறிது சிறிதாக அரிந்து வைத்துக் கொள்ளவும். அதனுடன்  சாம்பார் வெங்காயம், கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கி ஒன்றாக கலக்கிக்கொள்ளவும். பின்பு எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தயிர் இரண்டையும் ஊற்றி அதனுடன் தேவைக்கேற்ப மிளகுத் தூள், சீரகம் , உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக் கொண்டு தினமும் காலை வேளை உணவாக சாப்பிட்டு வந்தால் உடல்  சூட்டினால் உண்டாகும் குறைபாடு உடனே நீங்கும்.

(பின்பு பசித்தால் வழக்கமான உணவு எடுக்கலாம்)

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.