பெண்ணே! பசியைப் புறக்கணிக்காதே!

அனைத்து உயிர்களின் அன்றாட இயக்கங்களுக்கு அடிப்படைத் தூண்டுதலாக இருப்பது
பெண்ணே! பசியைப் புறக்கணிக்காதே!

அனைத்து உயிர்களின் அன்றாட இயக்கங்களுக்கு அடிப்படைத் தூண்டுதலாக இருப்பது பசி. உயிர்களின் அடிப்படை இயல்பு பசி. மனிதனின் பசியைத் தீர்க்க இயற்கை எண்ணற்ற வளங்களை வாரி கொடுத்துள்ள போதிலும், அனைவரும் அவற்றைத் தேவைக்கேற்ப துய்க்க முடிவதில்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வு நிறைந்த சமுதாயச் சூழலில் அளவுக்கு மீறி உண்பவர்கள் ஒருபுறமும் ஒருவேளை உணவுக்குக் கூட வழியில்லாதவர்கள் மறுபுறமும் உள்ளனர். பசி என்பது பிணியாக மாறி (பசிப்பிணி) மனிதர்களை வாட்டி வதைக்கிறது.
 
பசியும், பசிப்பிணியும், பசிப்பிணியால் ஏற்படும் துயரங்களும் பெருகியுள்ள சூழலில் பசியின்மை என்ற உடலியல் பிரச்சனையும் சிலரிடம் காணப்படுகிறது. பசியற்ற, பசி உணர்வற்ற நிலை ‘ANOREXIA’ என்றும் மனரீதியான, நரம்பியல் சார்ந்த பசியின்மை ‘ANOREXIA NERVOSA’என்றும் கூறப்படுகிறது.
 
பசியின்மைக்கு சில உடலியல் காரணங்கள் இருந்த போதிலும் நரம்பியல் பசியின்மைக்கு மன உண்ர்ச்சிகளே அடிப்படைக் காரணங்களாக உள்ளன. இந்நோய் ஆண்களை விட பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக பருவ வயது / இளம் வயதுப் பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. நடுத்தர வயது, முதிர்ந்த வயதுப் பெண்களிடம் சிலரிடம் மட்டுமே இந்நோய் உள்ளது. 


 
நரம்பியல் சார்ந்த பசியின்மைக்கு ஒரே ஒரு முக்கியக் காரணம் உடலை மிகவும் ஒல்லியாக, [SLIM] வாளிப்பாக வைத்து கொள்வதற்காக பசியைப் புறக்கணிப்பதுதான். ஏற்கனவே ஒல்லியாக உள்ள பெண்கள் கூட பருமனாகி விடக்கூடாது என்று கருதி உணவைக் குறைத்து உடலை இளைக்கக் செய்ய வேண்டும் என்பதற்காக எவ்வளவு பசித்தாலும் பட்டினி கிடப்பது, சில பெண்கள் பருவமடையப் பயந்து உணவை வெறுத்து ஒதுக்குவது போன்ற காரணங்களால் மனரீதியான பசியின்மை(ANOREXIA NERVOSA) ஏற்படுகிறது. 
 
தொடர்ந்து பசியினைப் புறக்கணித்து உண்ணாமல் இருப்பதால் பல்வேறு ஹார்மோன்களின் குறைபாடுகள் ஏற்படுகின்றன. தேவையான எடையிலிருந்து 25 சதவீதத்திற்கும் மேலாக குறைத்து விடுகிறது. முறையான உணவும், தேவையான சத்துக்களும் கிடைக்காமல் மாதவிடாய் அடக்கப்படுதல், தாமதமாகுதல், நின்று விடுதல், அளவு மாறுபடுதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இந்நோயால் சில பெண்களுக்கு மூன்று, நான்கு மாதகாலம் மாதவிடாய் தாமதமாகவும் வர நேரலாம்.
 
இளைஞர்களிடம் மனரீதியான பசியின்மை நோய் ஏற்பட்டால் பெண்கள் மீதான கவர்ச்சியும் பாலியல் உணர்ச்சிகளும் குறைந்து விடும். எடை குறைந்து வலிமை குன்றி உடல் பலவீனங்கள் உண்டாகும். பொதுவாக இந்நோய் ஆண், பெண் இருபாலருக்கும் இருதயத் துடிப்பு குறையும்; ரத்த அழுத்தம் குறையும்; பாலியல் உணர்வுகள் தோன்றாது. சிலரது உடலில் (கை, கால் பகுதிகளில்) நீலம் பூக்கும்; ஹார்மோன் கோளாறுகள் விபரீதங்களை ஏற்படுத்தும்.
 
இந்நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் போது அவர்களிடம் காணப்படும் பல்வேறு தவறான எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். உணவு உண்ணாமையால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை விளக்க வேண்டும். நோயாளிகளின் பெற்றோரிடம் இவ்விவரங்களை கூறி கவனமாய் பராமரிக்கக் கேட்டு கொள்ள வேண்டும். படிப்படியாய் சரியான அளவு உணவு உண்ணும் பழக்கத்தைக் கொண்டுவர வேண்டும்.பொதுவான பசியின்மையையும் சூழ்நிலை மற்றும் மனநிலைக் காரணங்களால் ஏற்படும் பசியின்மையையும் நீக்கி இயல்பான பசிச் சுவையை (Natural Appetite) ஏற்படுத்த ஹோமியோபதியில் கீழ்க்கண்ட மருந்துகளை பயன்படுத்தலாம்.
 

  • பசியின்மை (Loss Of Appetite) - சைனா, லைகோ, பல்சடில்லா, நக்ஸ்வாமிகா, சல்பர்
  • சாதாரண பசியின்மை அல்லது நோய்க்குப் பின் பசி குறைதல் - ஜென்டியானா லூட்டிகம் [தாய் திரவம்] உணவிற்கு 1/2 மணி நேரம் முன்பு 10 சொட்டு அஜீரணம், கசப்பு ருசி, நாக்கின்  பின் பகுதியில் மஞ்சள் மாசுபடிதல் போன்ற குறிகளுடன்  பசியின் - நக்ஸ்வாமிகா
  • சாப்பிடுவதிலோ, குடிப்பதிலோ கொஞ்சம் கூட விருப்பமில்லாத நிலை [ உணவு மற்றும் பானங்கள்]  - இக்னேஷியா
  • வாரக்கணக்கில் எதுவும் குடிக்காமல், உண்ணாமல் இருக்கும் நிலை - அபிஸ்மெஸ் மாதக்கணக்கில் எதுவும் சாப்பிட பிடிக்காமல் இருக்கும் நிலை - சிபிலினம்
  • சாப்பிட வேண்டும் என்ற மனம் இருப்பினும், பசிக்காத நிலை - மெசிரியம்
  • காலை நோரங்களில் மட்டும்  பசியின்மை - அபிஸ் நைக்ரே
  • பகலில் பசியின்மை - ஆர்சனிகம் ஆல்பம்
  • சாதாரண உணவுகளில் பசியின்மை மாறாத ஜீரணமாகாத, அமிலத் தன்மையான வேறு பொருள்கள்  சாப்பிட விருப்பம் -  இக்னேஷியா
  • அதிக வேலை காரணமாக பசியின்மை -  கல்கோரியா கார்ப்
  • வருத்தம் காரணமாக பசியின்மை - பிளாட்டினா
  • புகையிலையால் பசியின்மை - செபியா
  • மூளை உபாதைகளில் பசியின்மை - ஹெல்லி போரஸ்
  • உடலுறவுக்குப்பின் பசியின்மை - அகாரிகஸ்
  • நீர் குடித்தபின் பசியின்மை - காலிமுர்
  • கர்ப்பகாலத்தில் பசியின்மை - காஸ்டிகம், சபடில்லா

குறிப்பு : பொதுவாக பசியின்மை நோய்க்கு கல்லீரல் செயல்பாடு குறைவாக இருப்பதே (Inactive Liver) காரணமாக உள்ளதால் ஆங்கில / ஆயுர்வேத மருத்துவத்தில் Liv-52 மற்றும் வைட்டமின் மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளித்து கல்லீரல் செயல்பாட்டினை அதிகரித்து பசி தூண்டப்படுகிறது.

ஹோமியோபதி செலிடொனியம் 30 காலை, இரவு [உணவுக்கு முன் சியோனான்தாஸ் தாய்திரவம் 5 சொட்டு (Chionanthas – Q) உணவுக்கு பின் தொடர்ந்து சில நாட்கள் [ஓரிரு வாரம்] சாப்பிட்டால் பசி அதிகரிக்கும். குழந்தைகள் முதல் முதியோர் வரை பசியின்மை போக்க பயன்படும் அரிய ஹோமியோபதி டானிக் ஆல்பால்பா. சில குழந்தைகளிடம் ஒரு நேரம் நல்ல பசியும் மற்றொரு நேரம் முழுமையான பசியின்மையும் காணப்படும். குழந்தைகள் சில சமயம் பசியின் போது ஏதேனும் விரும்பிக் கேட்பதைக் கொடுத்தால் உண்ணாமல் கோபத்தில் எறியக்கூடும். இத்தகைய மன உணர்வுள்ள பசி நிலையை’CINA APPETITE’ என்று கூறலாம். ‘CINA’ தான் இதற்கான மருந்து. சின்கோனா ரூப்ரா Q + ஜென்டியானா லூட் Q கலவை மருந்து உணவு நேரத்தில் ½ மணி முன்பு 10 சொட்டுகள் [நீரில் கலந்து] சாப்பிட்டு வர ஓடி மறைந்த பசி தேடிவரும்.
 
Dr.S..வெங்கடாசலம்,

மாற்றுமருத்துவ நிபுணர், சாத்தூர்.

செல் - 94431 45700  / Mail : alltmed@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com