6. தலையணையும் தலைவலியும்!

6. தலையணையும் தலைவலியும்!

கழுத்து வலியின் பற்றிய தொடரின் இந்த பகுதி உங்கள் அன்றாட வாழ்க்கையின்

கழுத்து வலியின் பற்றிய தொடரின் இந்த பகுதி உங்கள் அன்றாட வாழ்க்கையின் போது செய்யும் சிறு சிறு தவறுகளால் கழுத்து வலி வர வாய்ப்புகள் பற்றியது. வலிக்கான காரணத்தையும் விளக்கங்கத்தையும்  விவாதிக்கலாம். அழுத்தம் மிக்க அன்றாட வாழ்க்கையில் சராசரி மனிதன் சுமாராக 6  மணி முதல் 8 மணி நேரம் வரை கண்டிப்பாக உறங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை நாம் எத்துனை பேர் நடைமுறை படுத்திக்கொண்டுள்ளோம் என்றால் மிகவும் செற்பமானவர்களே ஆம் என்று சொல்வார்கள். இந்தக் கட்டுரையை படிக்கும் நீங்கள் இனிமேல் கண்டிப்பாக அன்றாட உறக்கம் மேலே குறிப்பிட்ட கால அளவு கண்டிப்பாக இருக்கும் வண்ணம் பார்த்துகொள்ளுங்கள். இதனால் நாம் அடுத்த நாளின் அனைத்து வேலைகளையும் தொய்வில்லாமல் செய்வதோடு சிறப்பாகவும் செய்து முடிக்க முடியும். அதோடு மட்டுமல்லாமல் இருதயம், மூளை, மற்றும் ஜீரண உறுப்புகள் ஆரோக்கியமாக இயங்கவும் நோய்கள் இல்லாமல் வாழவும் முடியும். உறக்கம் நம் உடலுக்கு எந்த அளவு முக்கியமோ அதே அளவுக்கு உறங்கும் போது நீங்கள் உபயோகிக்கும் தலையணை கழுத்தின் நிலையை சரியாக இருக்குமாறு பார்த்து கொள்வது அவசியம்.

பல் துலக்கும் தூரிகையை சுமாராக 6 மாதம் ஒரு முறை மாற்றி விடுவது போல தலையணையும் குறைந்தது ஒரு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றி கொள்வது கழுத்து வலியினால் பின்னாளில் பாதிக்கப்படுவதை தள்ளிப் போட உதவும். ஆனால் நாம் யாருமே இதனை கருத்தில் கொள்வதில்லை, கழுத்துவலியின் மிக முக்கிய காரணம் நீங்கள் படுத்து உறங்கும் போது கழுத்தின் நிலை. படுக்கும் பொழுது ஆழந்த உறக்கத்தில் கழுத்து பகுதி நமக்கு எவ்வாறு உள்ளது என்பதை உணர முடியாது, உறங்க செல்லும் முன்னர்  நம் தலைக்கு வைத்து உறங்கும் தலையணை மிகவும் மிருதுவாகவும் இல்லாமல் மிகவும் கடினமாகவும் இல்லாமல் நடுநிலையில் மிருதுவான பஞ்சினால் செய்யப்பட்டவாறு இருக்குமாறு பார்த்து கொள்வது மிக அவசியம். அதே போல் உறங்கும் போது இட அல்லது வல பக்கம் படுத்து உறங்க நேரும் போது உங்கள் தலைப் பகுதி உங்கள் உடல் தண்டுவட அளவோடு ஒன்றி இருக்குமாறு அதாவது படத்தில் கூறியுள்ளது போல் இருக்குமாறு பார்த்து கொள்வது அவசியம். இதனால் உங்களுக்கு கழுத்தை சுற்றியுள்ள தசைகளில் ஏற்படும் இறுக்கத்தையும் ஏற்படும் தளர்வு நிலையையும் சம நிலை படுத்த உதவும். மிக கடினமான தலையணை உபயோகிக்கும் பெரும்பான்மையானவர்களுக்கு கழுத்து வலி இருப்பதை அனுபவரீதியாக கண்டறிவதால் இதன் முக்கியத்துவத்தை கூறுவது இங்கே எனது கடமையாகிறது.

உங்களின் கேள்வி எவ்வாறு கழுத்து வலியும் தலையணையும் தொடர்புள்ளது என்பதாக இருக்கலாம்? என்ன ஒரே குழப்பமாக இருக்கிறது என்று தோன்றுகிறதா? உங்கள் தலையணைக்கும் கழுத்து வலிக்கும் 100 சதவிகித தொடர்புண்டு, கழுத்து வலியோடு ஒருவர் முட நீக்கியல் மருத்துவரை நாடும்போது மருத்துவரின் முதல் கட்டளை தலையணை உபோயோகிப்பதை சிறிது காலம் நிறுத்துமாறு கூறுவார், நாம் யாருமே அவரிடம் ஏன் என்று கேட்க மாட்டோம் அதான் டாக்டரே சொல்லிட்டாரே சரி என்று வந்து விடுவோம், அதற்கான விளக்கம் இங்கே, நாம் அனைவருமே தலையணையை சுமாராக 10 அல்லது 15 வருடம் கவரை மட்டும் துவைத்து உபயோகிக்க பழக்கம் உள்ளவர்கள். தொடர் உபயோகிப்பால், உள்ளே இருக்கும் துணியோ அல்லது பஞ்சோ தனது இயல்பு நிலையில் இருந்து இறுகி போவதால் கழுத்தை சுற்றியுள்ள மிருதுவான தசைகளில் பல்வேறு மாற்றத்தையும் இறுக்கத்தை ஏற்படுத்துவதால் கழுத்தில் உள்ள எலும்புகளோடு இணைந்து இருக்கும் மிக முக்கிய தசையான TRAPEZIUS/டிரப்பீசியஸ் தசையில் ஏற்படும் இறுக்கம் அடுத்த நாள் காலையில் படுக்கையிலிருந்து எழும் பொழுது வலியாக உணர நேரிடுகிறது. இந்த தசையில் ஏற்படும் இறுக்கம் கழுத்தை சுற்றியுள்ள தசைகளிலும் இறுக்கத்தை ஏற்படுத்தும் பொழுது தலையை எந்த பக்கம் திருப்பினாலும் வலி வருவதும், நாள்பட்டவர்களுக்கு கடுமையான தலை வலியும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு ஆங்கிலத்தில் CERVICO GENIC HEAD ACHE என்பார்கள். சிலர் பல்வேறு மருத்துவர்களை தனக்கு வரும் தலைவலியின் காரணமரியவும் மருத்துவத்திற்காவும் நாடிவிட்ட கடைசில் பிசியோதெரபி மருத்துவத்திற்கு வருவதை காண முடியும், இவர்களின் முக்கிய பிரச்சனை கழுத்தை சுற்றியுள்ள தசைகளில் ஏற்படும் இறுக்கமாகும். 

இந்த கட்டுரையை படிக்கும் உங்களுக்கு கழுத்து வலியிருந்தால் முதலில் நீங்கள் செய்யும் முக்கிய வேலை உங்கள் தலையணையை மாற்றி விட்டு மேலே கூறிய அளவான உயரத்தில் தலையணை இருக்குமாறு கடையில் வாங்கி உபயோகிக்ககவும். இன்றளவும் இதற்கான சரியான தலையணை கடைகளில் கிடைப்பதில்லை. ஆனால் கழுத்து வலி உள்ளவர்கள் உபயோகிக்க சிறப்பான் முறையில் வடிமைக்கபட்ட தலையணைகள் கிடைக்கின்றன. இது எல்லாருக்கும் தேவையில்லை கடுமையான கழுத்து எலும்பு தேய்மானம் கழுத்து வலியால் தலை வலி போன்ற பாதிப்புள்ளவர்கள் இந்த முறையில் வடிமைக்கபட்ட தலையணையை உபயோகிக்கலாம். இது போன்ற சிறப்பான முறையில் வடிமைக்கபட்ட தலையணையை உபயோகிக்கும் பொழுது கழுத்து பகுதியும் தண்டுவட எலும்புகளும் நேர் கோட்டில் இருக்குமாறு பார்த்து கொள்ள முடியும்.

- T. செந்தில்குமார்,

பிசியோதெரபி மருத்துவர், கல்லூரி விரிவுரையாளர்,

ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி,

சாய் பிசியோ கேர் & க்யூர், பெங்களூர்.

8147349181

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com