எல்லா மதங்களிலுமே விரதம் என்ற ஒன்று வைத்திருக்கிறார்கள். இதன் காரணங்களை ஆராய்ந்து பார்த்தால் மனிதனுக்கு நோய் வராமல் தடுக்கவே என்பது புரியும். இவ்விரதங்கள் நமக்கு முன்னோர்கள் கொடுத்த மிகப் பெரிய வரப்பிரசாதம்.
விரதம் என்று சொன்னதுமே உடனே தோன்றுவது உண்ணா நோன்பு என்பதுதான். உண்ணா நோன்பு என்பது சாப்பிடாமல் இருப்பது மட்டும் அல்ல. இதில் பல சூட்சுமங்கள் நிறைந்துள்ளது. உதாரணமாக உண்ணா நோன்பு மொத்தம் ஏழு நாட்கள் இருக்க வேண்டும். நோயாளிகள் தவிர யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.
முதல் நாள் தோலுள்ள பழங்களை மட்டும் தான் உண்ண வேண்டும். (வாழைப்பழம், மாம்பழம், சப்போட்டாப் பழம்) இரண்டாம் நாள் சாறுள்ள பழங்களை மட்டும் தான் உண்ண வேண்டும்.(ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை). மூன்றாம் நாள் வெறும் தண்ணீரை மட்டும்தான் அருந்த வேண்டும். நான்காம் நாள் ஒன்றுமே சாப்பிடாமல் இருக்க வேண்டும். ஐந்தாம் நாள் சாறு உள்ள பழங்களை மட்டுமே உண்ண வேண்டும். ஏழாம் நாள் தோலுள்ள பழங்கள் சாப்பிட வேண்டும்.
இதுதான் உண்ணா நோன்பின் தத்துவம். ஒருவேளை பசி என்றாலே நம்மால் தாங்க முடியவில்லையே 7 நாட்கள் எப்படி சாப்பிடாமல் இருக்கப் போகிறோம் என்றுதான் தோன்றும். ஆனால் அப்படியும் நம்மால் இருக்க முடியும்.
முதல் நாள் நாம் சாப்பிடும் தோலுள்ள பழங்கள் நம் மலக்குடங்களை சுத்தப்படுத்தி கழிவுகளை நீக்கும். சாறுள்ள பழங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கும். மூன்றாம் நாள் நாம் அருந்தும் தண்ணீர் உடலில் எந்த எந்த பாகங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளதோ அவற்றைக் குணப்படுத்தும் (System Recovery). நான்காம் நாள் நம் உடல் ஒன்றுமே கேட்பதில்லை. அதனால் வயிறும் பசிப்பதில்லை.
ஐந்தாம் நாள் தண்ணீர், ஆறாம் நாள் சாறு உள்ள பழங்கள், ஏழாம் நாள் தோலுள்ள பழங்கள்.
ஒரு பூனையை எடுத்துக் கொள்வோம். தனக்கு நோய் வராமல் இருக்கச் சில நாட்கள் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துகிறது. பெரும் நோய்கள் தாக்காமல் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலாம். நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இயற்கை மருத்துவர்களின் ஆலோசனைப்படி உண்ணா நோன்பு இருப்பது நல்லது.
ஆனால் விரதம் இருக்கும் நாட்களில் உடலுக்கும் மூளைக்கும் வேலை கொடுக்காமல் இருக்க வேண்டும், அது மிகவும் முக்கியம்!
- டாக்டர் ஏவிஜி ரெட்டி
நன்றி - பிராணாயாமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கச்சபேஸ்வரர் திருக்கோயில் சித்திரை உத்திர பெருவிழா! | Kanchipuram

ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


