புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இன்றைய மருத்துவ சிந்தனை: வெங்காயப் பூ

பசியைத் தூண்ட மற்றும் குடலில் உள்ள தேவையற்ற வாயுவை வெளியேற்ற

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:45 am

தினமணி


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


வெங்காயப் பூ:

  • காசநோய் குணமாக வெங்காயப்பூவையும் , வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து இரண்டு ஸ்பூன் சாறு எடுத்து இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவந்தால்  காசநோய் குணமடையும்.
  • கண்பார்வை தெளிவடைய வெங்காயப்பூவைக் கசக்கி சாறு பிழிந்து எடுத்து இரண்டு சொட்டு சாறு வீதம் காலை, மாலை என இருவேளையும் கண்களில் விட்டு வந்தால்  கண்நோயால் பாதிக்கப்பட்டு பார்வை மங்கலாக இருப்பவர்களுக்கு  பத்து நாட்களில் கண்பார்வை தெளிவடையும்.‎
  • பல் மற்றும் ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர வெங்காயப்பூ மற்றும் வெங்காயம் இவை இரண்டையும் சம அளவு  எடுத்து அரைத்து சாறு பிழிந்து தினமும் வாய்கொப்பளித்து வந்தால்  பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்கள் அனைத்தும்  குணமடையும்.
  • வயிற்று வலி உடனே நிற்க வெங்காயப்பூ (ஒரு கைப்பிடியளவு) எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும். வெங்காயப்பூ நன்றாக வெந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிறிதளவு உப்பு சேர்த்து குடித்தால்  வயிற்று வலி உடன் நிற்கும்.
  • பசியைத் தூண்ட மற்றும் குடலில் உள்ள தேவையற்ற வாயுவை வெளியேற்ற வெங்காயம் சேர்த்து சமைக்கும் உணவுகளில் வெங்காயத்திற்கு பதிலாக வெங்காயப்பூவையும், வெங்காயத்தாளையும் சிறியதாய் நறுக்கிப் போட்டு சேர்க்கலாம். இப்படி சேர்த்து சாப்பிட்டால் பசியை தூண்டும். குடலில் உள்ள தேவையற்ற வாயுவை அகற்றும்.


KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.