/
- சுக்குடன் சிறிது பால் சேர்த்து மையாக அரைத்து நன்கு சூடாக்கி இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை கால் மூட்டுகளில் பூசி வர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
- சுக்கைத் தூள் செய்து எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
- சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இந்த ஐந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகி வர கடுஞ்சளி மூன்றே நாளில் குணமாகும்.
- சிறிது சுக்குடன் ஒரு வெற்றிலையை மென்று தின்றால் வாயுத் தொல்லை நீங்கும்.
- சுக்கு, வேப்பம்பட்டை இரண்டையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வர ஆரம்ப நிலை வாதம் குணமாகும்.
- சுக்கில் சிறிது நீர் தெளித்து விழுதாக அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போய்விடும்.
- சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து சுக்கு நீர் காய்ச்சிக் குடித்து வர, உடல் அசதி சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
- சுக்குடன் தனியா வைத்து சிறிது நீர் தெளித்து மையாக அரைத்து உண்டால் அதிக மருந்து அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை அடையும்.
- சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் அலர்ஜி அகலும்.
- சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்து வர மாந்தம் குணமாகும்.
- சுக்குடன் மிளகு சுண்ணாம்பு சேர்த்து மையாக அரைத்து பூசி வர தொண்டைக்கட்டு மாறும். குரல் இயல்பு நிலை பெறும்.
- சுக்குடன் சிறிது துளசி இலையை மென்று தின்றால் தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

- சிறிது சுக்குடன் சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்து சாப்பிட்டால் மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.
- சுக்குடன் கொத்துமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூல நோய் தீரும்.
- சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.
- சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.
- தயிர் சாதத்துடன் சிறிது சுக்குப் பொடி இட்டு சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறும்.
- சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாள் குடித்து வர விஷக்காய்ச்சல் குறையும்.
- சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர நீர்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
- சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கி வர ஈறுகள் பலம் பெறும். வாய் துர்நாற்றத்தை விலக்கும்.
- (உணவே மருந்து -நூலிலிருந்து )
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்&டி 4வது காலாண்டு லாபம் 3% சரிவு!

மேற்கு வங்கத்தில் பாஜக வென்ற மறுநாளே திறக்கப்பட்ட பழமையான துர்கா கோயில்!

ரத்ன குமாரின் 29 படத்தின் புரோமோ விடியோ!

வெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு


