சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

இன்றைய மருத்துவ சிந்தனை: வெந்தயம்

குடல் புண்கள் குணமாக பச்சரிசி (100 கிராம்), தேங்காய்ப்பால் (100 மி.லி), வெந்தயம் (20 கிராம்),  மஞ்சள் சிறிதளவு, அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் குடல் புண்கள் விரைவில் க

News image
Updated On :26 ஜூலை 2018, 12:00 am IST


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

  • குடல் புண்கள் குணமாக பச்சரிசி (100 கிராம்), தேங்காய்ப்பால் (100 மி.லி), வெந்தயம் (20 கிராம்),  மஞ்சள் சிறிதளவு, அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் குடல் புண்கள் விரைவில் குணமாகும்.
  • மலச்சிக்கல் குணமாக வெந்தயத்தை (10கிராம்) அளவு எடுத்து இரவு உணவுக்குப் பிறகு மாத்திரை விழுங்குவதுபோல் விழுங்கி தண்ணீர் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை.முற்றிலும் குணமாகும்.
  • சர்க்கரை நோய் கட்டுபாட்டில் வைக்க வெந்தயம், சுக்கு, ஒமம், நாவல்கொட்டை, நெல்லி, மஞ்சள் மேற்கூறிய அனைத்து பொருள்களையும் தலா 100 கிராம் அளவு எடுத்துப் பொடி செய்து கொள்ளவும்.இதை காலை, மாலை இருவேளையும்  2 கிராம் அளவு சுடுநீரில் கலந்து  சாப்பிட்டுவந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
  • உடல் எடை குறைய வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், மிளகு இவை மூன்றையும்  தலா 50 கிராம்  அளவு எடுத்து வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் வெறும் வயிற்றில் 2 ஸ்பூன்  அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
  • உடல் எடை குறைய சிறிது வெந்தயத்தை மென்று தின்று இரண்டு சின்ன வெங்காயத்தை மோரில் நறுக்கிபோட்டு சாப்பிட்டு வந்தால் பருமனான உடல் எடை குறையும்.
  • குழந்தை கொழுகொழுவென வளர குழந்தை பெற்ற தாய்மார்கள் வெந்தயத்துடன் கருப்பட்டி சேர்த்து களி செய்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் ஊறும். குழந்தை கொழு கொழு கொழுவென வளரும்.
  • வயிற்று வலி, வயிற்றுக் கடுப்பு குணமாக வெந்தயம் சிறிதளவு அதனுடன் இரண்டு வெற்றிலையை நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
  • கல்லீரல் பிரச்சனைகள் தீர வெந்தயத்தை சிறிதளவு எடுத்து அதனை எலுமிச்சைச் சாறுடன் சேர்த்து மையமாக அரைத்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்பந்தப்பட்ட  பிரச்சனைகள் தீரும்.
  • சிறுநீர் தாராளமாக வெளியேற வெட்டிவேர், வெந்தயம், சீரகம் சேர்த்துக் கஷாயம் வைத்து வடிகட்டி ஆறியதும் குடித்து வந்தால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell : 96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.