/
உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- ஒற்றைத் தலைவலி குணமாக சீந்தில் கொடி , சீரகம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.
- குடல் புண் குணமாக சீந்தில் கொடி , வில்வம் இலை இவை இரண்டையும் சம அளவு சேர்த்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் குடல் புண் குணமாகும்.
- சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க சீந்தில் கொடியைப் பொடி செய்து வைத்துக் கொண்டு காலை மாலை என இருவேளையும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
- கண்பார்வை கூர்மையாக சீந்தில் கொடி , பொன்னாங்கண்ணிக் கீரை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.
- வழுக்கைத் தலையில் முடி வளர சீந்தில் கொடியை நன்றாக அரைத்து வழுக்கைத் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி முளைக்கும்.
- சீந்தில் சர்க்கரை செய்யும் முறை: முதிர்ந்த, முற்றிய கொடியை, மேல் தோலை உரித்து, நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி, நன்றாக இடித்து, தேவையான அளவு தூய்மையான நீரில் கரைத்து, 4 மணி நேரம் வைத்திருந்து நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டியது போக சிறிதளவு மாவு போன்ற பொருள் பாத்திரத்தின் அடியில் படிந்திருக்கும். மீண்டும் மீண்டும் நீர்விட்டு இதனைத் தெளியவைத்து, வடிகட்டி எடுத்து நிழலில் உலர்த்தினால் வெண்மையான தூள் கிடைக்கும். இதுவே எளிய முறையில் தயாரிக்கப்பட்ட சீந்தில் சர்க்கரை ஆகும். இதனை, ஒரு கிராம் அளவில் உள்ளுக்குச் சாப்பிட, வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப்போக்கை நீக்கும். கல்லீரல், மண்ணீரல் ஆகியவை சீந்தில் சர்க்கரை சாப்பிட உறுதியாகும். உடல் எடை, உறுதி அதிகமாகும். பிற மருந்துகளுடன் சீந்தில் சர்க்கரை சிறிதளவு சேர்த்துக் கொடுக்க பலவகையான நோய்களும் விரைவில் குணமாகும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியல் தலைவர்களை சந்தித்த முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேசம் 179 ரன்கள் முன்னிலை!

முதல்வர் விஜய்க்கு பழக்கூடை வழங்கி வாழ்த்திய சீமான்!
முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் ‘அரவணைப்பு’ அரசியல்!
விடியோக்கள்

வீடியோக்கள்
விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
10 மே 2026, 4:51 pm IST

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
10 மே 2026, 4:47 pm IST

