பாதாம் பிஸ்தாவை விட அதிக சத்துள்ளது இது!

வேர்க்கடலையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை என்றாலே அதில் கொழுப்பு அதிகம்
பாதாம் பிஸ்தாவை விட அதிக சத்துள்ளது இது!
Published on
Updated on
1 min read

வேர்க்கடலையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். வேர்க்கடலை என்றாலே அதில் கொழுப்பு அதிகம், உடலுக்கு ஆகாது, உடல் பருமன் ஆகிவிடும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், அதில் உள்ளது நல்ல கொழுப்பு என்பதால் அதன் மதிப்பு தெரிந்த ஆங்கிலேயர்கள் இதனை அவர்கள் நாட்டிற்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து நமக்கு பாதாம், பிஸ்தாவை அதிக விலைக்கு தள்ளிவிட்டனர். வேர்க்கடலை எந்த விதத்திலும் இதற்கு குறைந்ததில்லை. வேர்க்கடலையில் நார்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், பொட்டாசியம், வைட்டமின்களை சொல்லிக் கொண்டே போகலாம். மூளை வளர்ச்சிக்கு மிக பெரிய டானிக் என்ற இதனைச் சொல்லலாம்.

இதை தினமும் 30 கிராம் அளவு சாப்பிடுவதால் பித்தக்கல் பிரச்னைகள் கூட சரியாகிவிடும். ரத்த ஓட்டமும் சீராகிறது. இதய நோய் வராமல் தடுக்கிறது. இதில் புரதச் சத்து அதிகம் உள்ளதால் கர்ப்பப்பை பிரச்னை தீரவும், தாய்ப்பால் சுரக்கவும் வழி செய்கிறது. ஒமேகா 3 இதில் உள்ளதால் குழந்தை உண்டாவதற்கும், மார்பகக் கட்டி, கருப்பைக் கட்டி, நீர்க் கட்டி என எதுவும் வராமல் தடுக்கிறது. இவ்வளவு நன்மைகள் உள்ள வேர்க்கடலையை நாம் தினமும் உணவில் பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

வேர்க்கடலையை வைத்து பலதரப்பட்ட தின்பண்டங்களை செய்யலாம். வேர்க்கடலை பர்பி, வேர்க்கடலை உருண்டை, லட்டு, வேர்க்கடலை எண்ணெய் போன்றவற்றை தயாரித்து சாப்பிப்டலாம். சுவையும் சத்தும் நிறைந்த வேர்க்கடலையை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியம் பெறலாம். சிலருக்கு வேர்க்கடலை ஒவ்வாமை இருப்பின் அதை அவர்கள் தவிர்ப்பது நலம்.

 - ஸ்ரீ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com