தேவையான பொருட்கள்
பருத்தி விதை - 50 கிராம்
சம்பா அரிசி - 50 கிராம்
பச்சரிசி - 50 கிராம்
தேங்காய்ப் பால் - 100 மி.லி
பசும்பால் - 100 மி.லி
பாதாம் பருப்பு - 5 எண்ணிக்கை
அக்கிராகாரம் - ஒரு துண்டு
சிற்றரத்தை - ஒரு துண்டு
கசகசா - ஒரு தேக்கரண்டி
பனங்கற்கண்டு - சிறிதளவு
செய்முறை
- முதலில் பருத்தி விதை, சம்பா அரிசி, பச்சரிசி இவை மூன்றையும் முதல் நாள் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்துக் கொள்ளவும்.
- பசும்பால், தேங்காய்ப் பால் இரண்டையும் ஒன்றாகக் கலந்து பால்பிழிந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- பாதாம் பருப்பை முதல் இரவு ஊறப்போட்டு மறுநாள் தோல் நீக்கி பாதாம் பருப்பை அரைத்து தேங்காய்ப் பாலுடன் சேர்த்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் மேற்கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து அடுப்பிலேற்றிப் பதத்தில் கீழே இறக்கி வைத்து அதில் அக்கிராகாரம், சிற்றரத்தை, கசகசா, பனங்கற்கண்டு இவற்றைத் தூள் செய்து சேர்த்துக் கலக்கி காலையில் குடித்து வரவும்.
- பால் கெட்டியாக இருந்தால் தேவையான அளவு தண்ணீர் கலந்து குடிக்கலாம்.
- சிறு குழந்தைகளுக்கு அளவை குறைத்து தரலாம்.
பயன்கள்
இந்த கஞ்சி உடலுக்கு ஆற்றலையும், வலிமையையும் கொடுக்கும் ஆற்றல் நிறைந்துள்ளதால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அருந்தலாம்.
நீரிழிவு நோயாளிகள் உண்ணக் கூடிய உன்னதமானக் கஞ்சி.
பயன்கள்
இந்தக் கஞ்சியை பல வருடங்களாக நீரிழிவு குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவேளை உணவாக உண்ணுவது சிறந்த பலனைத் தரும் அற்புதமான கஞ்சி.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


