சிறு கீரை மிளகு கசாயம்
தேவையான பொருட்கள்
சிறு கீரை. - ஒரு கட்டு
மிளகு. - 10
வெங்காயம். - 5
பூண்டு. - 5 பல்
மஞ்சள் தூள் - சிறிதளவு
செய்முறை
- முதலில் கீரையை கழுவி ஆய்ந்து வைத்துக் கொள்ளவும்.
- பூண்டு மற்றும் மிளகு ஆகியவற்றை தட்டி வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள கீரை , தட்டி வைத்துள்ள மிளகு , பூண்டு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
- நன்கு கொதித்து அதனை பாதியாகச் சுண்ட வைத்து இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
பலன்கள்
- கண் புகைச்சல், கண் காசம் மற்றும் கண் படலம் ஆகிய குறைபாடு உள்ளவர்களுக்கு அரு மருந்தாக உதவும் கசாயம்.
- இதனை தினமும் காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் நல்ல பலன் கிட்டும்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை

சங்கரன்கோவிலில் சித்திரைத் தேரோட்டம்

கடையநல்லூா் கரியமாணிக்க பெருமாள் கோயில் தேரோட்டம்

காசிதா்மத்தில் இளைஞருக்கு வெட்டு: இரு தரப்பினா் மோதல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


