புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

உடலை இரும்பைப்போல் உறுதியாக்க உதவும் அருமருந்து

இளைத்த உடலைத் தேற்றவும், உடலை இரும்பைப் போல் உறுதியாக்கவும், எலும்பு மண்டலம் மற்றும் நரம்பு மண்டலங்களை வலுப்படுத்தவும் இந்த அருமருந்தைப் பயன்படுத்திப் பலன்பெறுங்கள். 

News image
Updated On :27 ஏப்ரல் 2021, 7:00 am

தினமணி

இளைத்த உடலைத் தேற்றவும், உடலை இரும்பைப் போல் உறுதியாக்கவும், எலும்பு மண்டலம் மற்றும் நரம்பு மண்டலங்களை வலுப்படுத்தவும் இந்த அருமருந்தைப் பயன்படுத்திப் பலன்பெறுங்கள். 

தேவையான பொருள்கள்

வேங்கைப் பட்டை.        -   100 கிராம்

கடுக்காய்த் தோல்.      -   100 கிராம்

கருங்காலிப் பட்டை   -   100 கிராம்

ஆவாரம்பட்டை           -    100 கிராம்

மருதம் பட்டை             -   100 கிராம்

ஏலக்காய்                     -   100 கிராம்

செய்முறை

முதலில் வேங்கைப்பட்டை, கருங்காலிப் பட்டை, ஆவாரம்பட்டை, மற்றும் மருதம்பட்டை ஆகியவற்றை மேற்கூறிய அளவு எடுத்து நன்கு சுத்தப்படுத்திக் கொள்ளவும். கடுக்காயைத் தட்டி உள்ளே உள்ள கொட்டையை நீக்கி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

ஏலக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு வெறுமனே நன்கு சூடுபடுத்திக் எடுத்துக் கொள்ளவும். பின்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக அரைத்து தூளாக்கிக் கொண்டு  பின்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். மேற்கூறிய பட்டை கிடைக்கவில்லையென்றால் அனைத்து பொடியாகவே நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும். அதனை சம அளவு வாங்கிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் இளைத்த உடலைத் தேற்றவும் , உடலை இரும்பைப் போல் உறுதியாக்கவும், எலும்பு மண்டலம் மற்றும் நரம்பு மண்டலங்களை வலுப்படுத்தவும் உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய குறைபாடுகளால் துன்பப்படுபவர்கள் இந்த சூரணத்தைத் தயார்செய்து  தினமும் காலை இரவு என இருவேளையும் சாப்பிட்ட பின்பு தலா இரண்டு கிராம் எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வரவும்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை  எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா 

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 

Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.