புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கிட்டப் பார்வை, தூரப் பார்வை குறைபாடுகளைப் போக்க உதவும் அருமருந்து 

பார்வைத்திறனை கூர்மையாக்கவும், கிட்டப் பார்வை மற்றும் தூரப் பார்வை குறைபாடுகளைப் போக்க தினமும் இந்த சூரணத்தை எடுத்துக்கொள்ளவும். 

News image
Updated On :28 ஏப்ரல் 2021, 6:44 am

தினமணி

பார்வைத்திறனை கூர்மையாக்கவும், கிட்டப் பார்வை மற்றும் தூரப் பார்வை குறைபாடுகளைப் போக்க தினமும் இந்த சூரணத்தை எடுத்துக்கொள்ளவும். 

தான்றிக்காய் பொன்னாங்கண்ணிக் கீரைச் சூரணம்

தேவையான பொருட்கள்

தான்றிக்காய் ( கொட்டை நீக்கியது) -  கால் கிலோ

பொன்னாங்கண்ணிக் கீரைச் சாறு - அரை லிட்டர்

செய்முறை

முதலில் தான்றிக்காய் வாங்கி உள்ளே உள்ள கொட்டையை நீக்கி சுத்தப்படுத்தி  அரைத்து தூள் செய்து கொள்ளவும். பொன்னாங்கண்ணிக் கீரையைத் தேவையான அளவு எடுத்து சுத்தப்படுத்தி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறாக்கி அரை லிட்டர் அளவு எடுத்துக் கொள்ளவும்.

பின்பு சாறுடன் தான்றிக்காய் பொடியை கலந்து நன்கு பிசைந்து வெயிலில் காயவைத்து உலர்த்தவும். தேவைப்பட்டால் நன்கு காய்ந்தப்பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளலாம்.

பயன்கள்

இந்த சூரணம் கிட்டப்பார்வை, தூரப்பார்வையிலிருந்து விடுபடவும் மற்றும் கண் பார்வைத் திறனைக் கூர்மையாக்கவும் உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய குறைபாடுகளால் துன்பப்படுபவர்கள் இந்த சூரணத்தைத் தயார்செய்து தினமும் காலை இரவு என இருவேளையும் சாப்பிட்ட பின்பு தலா இரண்டு கிராம் எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வரவும்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை  எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.