முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

அனைத்து விதமான காய்ச்சலையும் போக்க உதவும் அற்புத சூரணம்

அடிக்கடி காய்ச்சலால் அவதிப்படுவோர் இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு திப்பிலிச் சூரணத்தைப் பயன்படுத்திப் பலனடையுங்கள். 

News image

கோப்புப்படம்

Updated On :30 ஜனவரி 2021, 9:15 am

அடிக்கடி காய்ச்சலால் அவதிப்படுவோர் இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு திப்பிலிச் சூரணத்தைப் பயன்படுத்திப் பலனடையுங்கள். 

தேவையான பொருள்கள்

தண்ணீர் விட்டான் கிழங்கு - 50 கிராம்

திப்பிலி         -  50  கிராம்

மிளகு            -   50  கிராம்

சுக்கு              -   50 கிராம்

செய்முறை

முதலில் தண்ணீர் விட்டான் கிழங்கு , திப்பிலி மற்றும் மிளகு ஆகியவற்றை  எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளவும். சுக்கை மேல்தோல் சீவி சுத்தப்படுத்திக் கொள்ளவும். பின்பு நான்கையும் ஒன்றாகக் கலந்து அரைத்து பொடிசெய்து வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் அனைத்து விதமான காய்ச்சல்களைப் போக்க உதவும் அருமருந்தாகும். காய்ச்சலினால்  துன்பப்படும்பொழுது இந்தச் சூரணத்தை  காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் தலா இரண்டு கிராம் அளவு எடுத்து அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிடவும். தேவைப்பட்டால் மூன்றுவேளையும் எடுத்துக் கொள்ளலாம்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை  எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

-கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 

Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.