மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலியைப் போக்க இந்த சூரணத்தைத் தயார்செய்து பலனடையுங்கள்.
தேவையான பொருள்கள்
அசோகப் பட்டை - 150 கிராம்
பெருங்காயம். - 25 கிராம்
செய்முறை
முதலில் அசோகப் பட்டையை தேவையான அளவு எடுத்து சுத்தப்படுத்தி நன்கு உலர வைக்கவும். பெருங்காயத்தை சுத்தப்படுத்தி தூளாக்கிக் கொள்ளவும்.
பின்பு அசோகப் பட்டையை அரைத்து தூளாக்கி அதனுடன் பெருங்காயத் தூளைச் சேர்த்து ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். மேற்கூறியவற்றில் அசோகப் பட்டை பொடியாகவே நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும். அதனை வாங்கிக் கொள்ளவும்.
பயன்கள்
இந்த சூரணம் மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலியை முற்றிலும் குணமாக்க உதவும் அருமருந்தாகும்.
மேற்கூறிய குறைபாடுகளால் பல வருடங்களாக துன்பப்படுபவர்கள் இந்த சூரணத்தை தயார்செய்து தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மாதம் தொடர்ந்து காலை , மதியம் மற்றும் மாலை என மூன்று வேளையும் தலா இரண்டு கிராம் எடுத்து சாப்பாட்டிற்கு அரை மணி நேரம் முன்பு பசு வெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி முற்றிலும் குணமாகும்.
நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக் கொள்ளலாம்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
-கோவை பாலா,
இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell : 96557 58609 , 75503 24609
Covaibala15@gmail.com
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளின் தூதா்களைத் திரும்ப அழைத்த நேபாளம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு இல்லாத காலிப் பணியிடங்கள்: எஸ்சி, எஸ்டி, ஓபிசிகள் விண்ணப்பிக்கலாம்!
வேட்புமனு பரிசீலனை: தூத்துக்குடி மாவட்டத்தில் 121 மனுக்கள் ஏற்பு, 67 மனுக்கள் தள்ளுபடி

வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


