மாணவர்களே தூக்கத்துக்கும் உங்கள் மதிப்பெண்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு! ஆய்வறிக்கை

மாணவர்களின் தூக்க நேரத்துக்கும் அவர்கள் வாங்கும் மதிப்பெண்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது.
மாணவர்களே தூக்கத்துக்கும் உங்கள் மதிப்பெண்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு! ஆய்வறிக்கை
Published on
Updated on
2 min read

மாணவர்களின் தூங்கும் நேரத்திற்கும் அவர்கள் வாங்கும் மதிப்பெண்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. ஆம், புதிய ஆய்வொன்றில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தது இதுதான். மாணவர்களின் மதிப்பெண்களுக்கும் அவர்களின் உறக்க காலநேரத்திற்கும் இடையே ஒரு வலுவான உறவைக் கண்டறிந்துள்ளனர்.

மாணவர்கள் படுக்கைக்குச் செல்லும் குறிப்பிட்டதொரு நேரம் மற்றும் அவர்களின் படிப்புக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பரீட்சைக்கு முந்தைய இரவு மட்டும் நல்ல தூக்கத்தைப் பெறுவது போதாது என்றும் அது கூறுகிறது. தொடர்ந்து பல இரவுகள் நன்றாக தூங்கினால்தான் அவர்கள் நன்றாக பாடத்தில் கவனம் செலுத்துவார்கள் என்று 'சயின்ஸ் ஆஃப் லெர்னிங்' என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென ஆராய்ச்சியாளர்கள் எம்ஐடி பொறியியல் வகுப்பில் 100 மாணவர்களை இந்த ஆய்வுக்கு தேர்ந்தெடுத்தார்கள்.

அதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த மாணவர்களுக்கான குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு படுக்கைக்குச் சென்ற நபர்களின் எண்ணிக்கை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாறுபட்டது. எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் சோதனை குறைவான செயல்திறனைக் காட்டினாலும் மொத்த தூக்க நேரத்தில் அவர்களால் பெற முடிந்தது.

இதற்கிடையில், உடற்பயிற்சிக்கும் மாணவர்களின் கல்வி செயல்திறனுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் முயன்றனர். 100 மாணவர்களில் நான்கில் ஒரு பங்கினரை தீவிர உடற்பயிற்சி வகுப்பில் சேர்த்தனர். உடற்பயிற்சி வகுப்புகள் இல்லாதவர்களையும் கண்காணித்து வந்தனர்.

ஒரு நாளின் முடிவில் நாங்கள் கண்டது உடல் தகுதிக்கும் உறக்கத்துக்கும் உண்டான தொடர்பு பூஜ்ஜியம்தான். இது எங்கள் நம்பிக்கைக்கு ஏமாற்றமளித்தது. அறிவாற்றல் செயல்திறனில் உடற்பயிற்சியின் மிகப் பெரிய நேர்மறையான தாக்கம் உள்ளது’ என்று எம்ஐடி பேராசிரியர் கிராஸ்மேன் கூறினார்.

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சாதனங்கள் தூக்கத்தை வெளிப்படையாகக் கண்காணிக்கவில்லை என்றாலும், இந்த ஃபிட்பிட் திட்டத்தின் வழிமுறைகள் உறங்கும் நேரத்தையும், தூக்கத்தின் தரத்திலும் ஏற்படும் மாற்றங்களையும் கண்டறிந்தன, 

பரிட்சைக்கு முந்தைய நாள் மட்டும் நன்றாக தூங்கியவர்களின் மதிப்பெண்களில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று இந்த ஆய்வின் முடிவில் தெரிந்தது.

மற்றொரு ஆச்சரியமான கண்டுபிடிப்பு என்னவென்றால், படுக்கை நேரங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொடர்பு இருப்பதாகத் தோன்றுகிறது, அதாவது பின் இரவில் படுக்கைக்குச் செல்வது மோசமான செயல்திறனை விளைவிக்கும், முன்னதாக தூங்க சென்றவர்களுடன் ஒப்பீட்டு அளவுகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட என்று கூறுகிறது இந்த ஆய்வு.

'நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது. உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு  நேரம் தூக்கம் வந்தால் - ஏழு மணிநேரம் என்று வைத்துக் கொள்ளுங்கள் - அந்த தூக்கம் உங்களுக்கு வரும்போது 10 மணிக்கு படுக்கைக்குச் செல்லுங்கள், அல்லது 12, அல்லது 1 மணிக்கு, இப்படி எத்தனை மணிக்கு படுக்கச் சென்றாலும் உறக்கத்தின் அளவு ஏழு மணி நேரம் என்று இருந்தால் உங்கள் செயல்திறன் ஒன்றுதான். ஆனால் நீங்கள் 2 க்குப் பிறகு படுக்கைக்குச் சென்றால், அதே ஏழு மணிநேரம் தூக்கம் கிடைத்தாலும் உங்கள் செயல்திறன் குறையத் தொடங்குகிறது. எனவே, உறங்கியும் பயனில்லாமல் போகிறது’ என்று பேராசிரியர்  கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com