/

மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவதே லட்சியம்: வெங்கைய நாயுடு

குவாஹாட்டி,ஜன.8: தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் மத்திய அரசில் ஆட்சி பீடத்தில் ஏற்றுவதே பாரதிய ஜனதாவின் லட்சியம்; அதற்காகத்தான் அசாமில் இப்போது கட்சியின் தேசிய செயற்குழு கூடி ஆலோசனை நடத்துகிறது என்றார

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

குவாஹாட்டி,ஜன.8: தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் மத்திய அரசில் ஆட்சி பீடத்தில் ஏற்றுவதே பாரதிய ஜனதாவின் லட்சியம்; அதற்காகத்தான் அசாமில் இப்போது கட்சியின் தேசிய செயற்குழு கூடி ஆலோசனை நடத்துகிறது என்றார் கட்சியின் மூத்த தலைவரான எம். வெங்கைய நாயுடு.

 "ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசைப் பதவியிலிருந்து அகற்றிவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியைப் பதவியில் அமர்த்த என்ன செய்ய வேண்டும் என்று இந்த 2 நாள் தேசிய செயற்குழு கூட்டத்தில் ஆழ்ந்து விவாதிப்போம்.

 ஊழல்களைக் களைய நிர்வாக ரீதியாக என்ன செய்ய வேண்டும், சட்டப்பூர்வமாக என்ன செய்ய வேண்டும் என்று விவாதிப்போம், விலைவாசி உயர்வு, நாட்டுக்கு பெருத்த அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதம், அசாமில் அதிகரித்துள்ள வங்கதேசிகள் ஊடுருவல் போன்ற தேசிய பிரச்னைகளும் அலசப்படும்.

 அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய், காய்கறிகள், பழங்கள், பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு என்று எல்லாவற்றின் விலையும் உயர்ந்துவிட்டதால் மக்களுடைய வாழ்க்கைத் தரம் வெகுவாக குறைந்துவிட்டது. எனவே இதற்கு முக்கியத்துவம் தந்து நாடாளுமன்றத்தில் விவாதிப்போம்.

 மக்களை பெரும்பான்மை, சிறுபான்மை என்று பிரித்துப் பார்க்கும் நிலைமை மாற வேண்டும். பெரும்பான்மையை பாதிக்கும் எல்லா பிரச்னைகளும் சிறுபான்மையையும் பாதிக்கும். சிறுபான்மை மக்களுக்கு நன்மைகள் தரும் எந்த திட்டமும் பெரும்பான்மைக்கும் நன்மையைத் தரும் என்பதால் அதற்கேற்ப வளர்ச்சி திட்டங்களை வகுத்து மக்களை அணுகுவோம்' என்றார் வெங்கைய நாயுடு.

 சுஷ்மா ஸ்வராஜ்: பிகாரில் நடந்த சட்டப் பேரவையில் வெற்றி பெற்றதைப் போலவே அசாமிலும் வெற்றி பெறுவோம் என்றார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.