இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் ஜெயலலிதா

பெங்களூர், அக்.19: சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை ஆஜராகிறார். 1991 முதல் 1996ம் ஆண்டுவரை நடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மாதம்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:59 pm

பெங்களூர், அக்.19: சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை ஆஜராகிறார்.

1991 முதல் 1996ம் ஆண்டுவரை நடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மாதம் ரூ.1 சம்பளம் பெற்றுவந்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ.66.56 கோடி சொத்து சேர்த்ததாக சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 1996 முதல் 2001ம் ஆண்டுவரை நடந்த திமுக ஆட்சியில் ஜெயலலிதா மீது 48 சொத்துக்குவிப்பு வழக்குகள் தொடுக்கப்பட்டன.

ஊழல் தடுப்புச்சட்டத்தில் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர்ந்ததோடு, 1997ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி 3வது சிறப்பு நீதிபதி பி.அன்பழகன் முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துக்குவித்ததாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

ஜெயலலிதா தொடர்பான வழக்குகளை விசாரிக்க 1997ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை மூலம் 3 நீதிபதிகள் கொண்ட சிறப்பு நீதிமன்றத்தை அமைத்தது. பல்வேறு நீதிமன்றங்களில் நடந்துவந்த 48 வழக்குகளை ஒன்று சேர்த்து சொத்துக்குவிப்பு வழக்காக விசாரிக்க உத்தரவிடப்பட்டது. சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.சம்பந்தம், வி.ராதாகிருஷ்ணன், பி.அன்பழகன் ஆகியோர் வழக்குகளை விசாரித்து வந்தனர்.

டான்சி, பிளசன்ட் ஸ்டே ஓட்டல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளில் ஜெயலலிதாவை விசாரிக்க அன்றைய தமிழக ஆளுநர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடர்ந்த 3 ரிட் மனுக்களை 1997ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இ.பத்மநாபன் தள்ளுபடி செய்தார்.

சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தின் சிறுவழக்குகள் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான 77 அசையா சொத்துக்களை வழக்கில் சேர்க்க உத்தரவிட்டார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பாசன வசதியுள்ள ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளிட்ட சொத்துக்களின் அன்றைய மதிப்பு ரூ.3.21 கோடியாகும்.

2001ல் நடந்த சட்டப் பேரவை பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று அமைந்த அதிமுக ஆட்சியில் மீண்டும் ஜெயலலிதா முதல்வரானார். அப்போது வழக்கு விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

ஜெயலலிதா ஆட்சியில் இருப்பதால் வழக்கு விசாரணை நியாயமான முறையில் நடக்காது என்பதால், இவ்வழக்கை கர்நாடகத்துக்கு மாற்ற வேண்டுமென்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை கர்நாடகத்துக்கு மாற்றி 2003 நவம்பர் 18ம் தேதி உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பெங்களூர் சிட்டிசிவில் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது.

அரசு தரப்பில் வாதிட மூத்த வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யாவை நியமித்தது. 2004 பிப்ரவரி 14ம் தேதி முதல் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

இதுவரை 259 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் மறுவிசாரணை நடத்தப்பட்டது. 2,341 ஆவணங்களை சிறப்பு நீதிமன்றம் பரிசீலித்தது.

ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் ஜோதி, நவநீதகிருஷ்ணன், பி.குமார், பி.கந்தசாமி, ஏ.கந்தசாமி உள்ளிட்டோர் வாதாடியுள்ளனர்.

அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யாவும், அவருக்கு உதவியாக சந்தோஷ் செüதா ஆஜராகி வருகிறார்கள். தமிழக அரசின் லஞ்சத்தடுப்புத்துறை விசாரணை அதிகாரியாக நல்லம்மநாயுடு செயல்பட்டுவந்தார்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்.

நீதிபதி மனோலியை தொடர்ந்து தற்போது நீதிபதி பி.எம்.மல்லிகார்ஜுனையா சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து வருகிறார்.

சொத்து குவிப்பு வழக்கு: ஒரு பார்வை

2011 ஜன.25: குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 313ன்கீழ் தன்னுடைய மற்றும் ஜெயலலிதாவின் வாக்குமூலங்களை பதிவுசெய்வதைத் தள்ளிவைக்கக் கோரி தாக்கல் செய்திருந்த வி.என்.சுதாகரனின் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி

செய்தது.

2011 பிப்.22: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவிப்பதற்காக நீதிபதி என்.தினகரனிடம் நேரில் பேரம் பேசியதாக ஒருவர் மதுரையில் கைது

செய்யப்பட்டார்.

2011 ஜூன் 14: தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதிக்கக் கோரிய ஜெயலலிதாவின் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2011 ஜூலை 29: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க கர்நாட

க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது.

2011 ஆக.12: சொத்துக்குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து ஜெயலலிதாவுக்கு விலக்களிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம், விடியோ கான்பரன்ஸ் மற்றும் எழுத்துமூலமாக வாக்குமூலத்தை பதிவு செய்யவும் அனுமதி

மறுத்தது.

2011 செப்.13: வாக்குமூலத்தைப் பதிவு செய்ய பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக விலக்களிக்க கோரிய ஜெயலலிதாவின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ஜெயலலிதாவின் விருப்பப்படி அக்.20ம் தேதி பெங்களூருக்கு சென்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.

2011 அக்.19: அக்.20ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து 2 வாரகால அவகாசம் கேட்டு ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.