தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விரைவில் செல்போனில் டி.டி. நிகழ்ச்சிகள்

தொலைக்காட்சி (தூர்தர்ஷன்) நிகழ்ச்சிகளை கைபேசியில் (செல்போன்) பார்க்கும் வசதி அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்று பிரசார் பாரதி நிறுவனத்தின் உறுப்பினர் (பணியாளர்) பிரிகேடியர் வி.ஏ.எம்.

News image
Updated On :9 டிசம்பர் 2012, 7:48 pm

அ. சர்ஃப்ராஸ்

தொலைக்காட்சி (தூர்தர்ஷன்) நிகழ்ச்சிகளை கைபேசியில் (செல்போன்) பார்க்கும் வசதி அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்று பிரசார் பாரதி நிறுவனத்தின் உறுப்பினர் (பணியாளர்) பிரிகேடியர் வி.ஏ.எம்.  ஹுசைன் தெரிவித்தார்.
 "தினமணி' இதழுக்கு அவர் அளித்த பேட்டி:
 பிரசார் பாரதி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி நிலையம் ஆகியவற்றின் நிகழ்ச்சிகளில் புதிய மாற்றம் கொண்டு வரப்படும். அதன்படி
 தனியார் செய்தி தொலைக்காட்சிகளுக்கு இணையான செய்திகள் நிகழ்ச்சிகளை அரசுத் தொலைக்காட்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் ஒரு கட்டமாக யூ டியூப், மொபைல் போன் ஆகியவற்றிலும் காண நடவடிக்கை எடுக்கப்படும்.
 முதல் முறையாக பார்வையாளர்கள் மதிப்பீட்டுக் குழு, நிகழ்ச்சி ஆலோசனைக் குழு என்று இரு குழுக்களை அமைத்துள்ளோம். விரைவில் இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டவுடன் பொதிகையின் நிகழ்ச்சிகளில் நிறைய மாற்றங்கள் வரும்.
 பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ப பொதிகை தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படும்.
 நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டும் வானொலி நிலையங்களில் கொடைக்கானல், காரைக்கால் ஆகியவை உள்ளன. இந்நிலையங்களில் புதிய தொழில்நுட்பங்களை இடம்பெறச் செய்வது அவசியம்.
 டிஜிட்டல் ரேடியோ: அகில இந்திய வானொலியை டிஜிட்டல்மயமாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். "டிஜிட்டல் ரேடியோ' ஒலிபரப்புக்காக அதிக திறன் வாய்ந்த டிரான்ஸ்பாண்டர்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதன் மூலம் அரசு வானொலியைத் தனியார் பண்பலை (எஃப்எம்) போல தெள்ளத் தெளிவாகக் கேட்கலாம்.
 இந்தப் புதிய மாற்றங்கள் மூலம் தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி வருங்காலத்தில் மக்களைக் கவரும்.
 மக்கள் பார்க்கும் தரமான நிகழ்ச்சிகளைத் தூர்தர்ஷன் தயாரித்து வருகிறது.
 வர்த்தக ரீதியில் இந்நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுவதில்லை. தேசிய ஒருமைப்பாடு, சமுக நீதி, வேளாண்மை, ஊரக சீரமைப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு, பழங்குடியினர் மேம்பாடு, பெண்கள் மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் நிகழ்ச்சிகள் செய்யப்படுகின்றன என்றார் ஹுசைன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.