குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. முகேஷ் காத்வி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 50.
குஜராத்தின் பனஸ்கந்தா மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த முகேஷ் காத்விக்கு சமீபத்தில் மூளைச் செயலிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆமதாபாதில் உள்ள ஸ்டெர்லிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது வெவ்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை இறந்தார்.
பனஸ்கந்தா தொகுதியில் இருந்து இரு முறை எம்.பி.யாகவும், தாந்தா தொகுதியில் இருந்து 3 முறை எம்.எல்.ஏ.வாகவும் தேர்வு செய்யப்பட்டவர் முகேஷ் காத்வி. அவருக்கு மனைவி, இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். முகேஷ் காத்வியின் மறைவுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மூத்த காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோஹில் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முகேஷ் காத்வியின் தந்தையும், மறைந்த தலைவருமான பி.கே.காத்வி, ராஜீவ்காந்தி அரசில் நிதித்துறை இணை அமைச்சராகவும், குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா?

திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலை.யில் சேர ஜூன் 12-ல் நுழைவுத் தேர்வு

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை!

பாரதிராஜாவுக்கு என்னைப் பிடிக்கும்; என் நடிப்பு பிடிக்காது! ரஜினிகாந்த் பேட்டி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



