தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிக்கு வருவோரை தனியார் விவசாய நிலங்களில் களை எடுத்தல், நீர்ப் பாய்ச்சுதல், நாற்று நடுதல், பூச்சி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபடுத்தலாம் என்று திண்டுக்கல் தொகுதி மக்களவை காங்கிரஸ் கட்சி உறுப்பினர் என்.எஸ்.வி. சித்தன் கூறினார்.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை ரூ. 132-ல் இருந்து ரூ. 150-ஆக உயர்த்த வேண்டும் என்றும், இது குறித்து, மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக, நிருபர்களிடம் சித்தன் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தற்போது இத்திட்டத்தின் கீழ் சாலை அமைப்பது, கண்மாய் அகலப்படுத்துதல், கால்வாய் வெட்டுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், தனிப்பட்ட விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் இல்லை.
மேலும், இத்திட்டத்தில் அதிகமானோர் பங்கேற்பதால் கிராமங்களில் விவசாயப் பணிக்கு ஆள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
ஆகவே, 100 நாள் வேலைத்திட்டத்தில் பங்கேற்கும் நபர்களுக்கு அளிக்கப்படும் வேலை நாள்களில் பாதி அளவு நாள்களை தனியார் பண்ணைகளில் வேலை செய்வதற்கு ஒதுக்க வேண்டும்.
தனியார் விவசாய நிலங்களில் களை எடுத்தல், நீர்ப் பாய்ச்சுதல், நாற்று நடுதல், பூச்சி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் அவர்களை ஈடுபடுத்தலாம்.
தனியார் விவசாய நிலங்களில் விவசாயப் பணிகளுக்குத் தேவைப்படும் ஆள்கள் குறித்த தேவையை அந்தந்த கிராம சபைகளில் விவசாயிகள் தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான ஆள்களை வழங்கும் முடிவை கிராம சபையினர் மேற்கொள்ளலாம்.
வேலையாள்களுக்கான ஊதியத்தில் 100 ரூபாயை அரசும், 50 ரூபாயை தனியார் விவசாயிகளும் சேர்த்து அளிக்க வழிவகை செய்யவேண்டும். இதனால், விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்ற நிலை மாறும். அத்துடன் தானிய உற்பத்தியும் அதிகரிக்கும், வேலைவாய்ப்பும் பெருகும் என்று தனது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சித்தன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமராவதி-குழப்பம் தீர்ந்தது!

பட்டதாரிகள் வேலை இல்லாமல் தவிக்கின்றனா்: ஏசி. சண்முகம்

தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் 2 போ் தோ்வு

பிறவி மருந்தீசா் கோயில் கருப்பன் வீதியுலா
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


