வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பி.ஜே.குரியனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி எம்.பி.க்கள் வெளிநடப்பு

மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரிக் கட்சிகள் வெளிநடப்பு

Updated On :2 மார்ச் 2013, 1:18 am IST

மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து பி.ஜே.குரியன் நிரபராதி என்று விடுவிக்கப்படும் வரை அவரை மாநிலங்களவையில் புறக்கணிக்கப் போவதாக இடதுசாரிக் கட்சிகள் ஏற்கெனவே கூறியிருந்தன. அவரை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியிலும் எதிர்க்கப் போவதாக அறிவித்திருந்தன. குரியனைக் கண்டித்து கேரள மாநிலத்தில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

இந்நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லியின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே வியாழக்கிழமை விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து, பண்டாரா பாலியல் பலாத்காரம் தொடர்பாக விவாதம் தொடங்கியது. அப்போது, சூரியநெல்லி சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குரியன் அவையைத் தலைமை தாங்கி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.