குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் முகேஷ் காத்வி மறைவுக்கு மக்களவையில் வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டு, பிறகு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
முகேஷ் காத்வி(50) ஆமதாபாதில் வெள்ளிக்கிழமை காலையில் காலமானார். குஜராத் மாநில சட்டப்பேரவையில் 1998 முதல் 2009-ம் ஆண்டு வரை மூன்று முறை உறுப்பினராக இருந்துள்ளார்.
மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் முகேஷ் காத்வி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் மீரா குமார் தெரிவித்தார்.
"சமூக சேவகரும், அரசியல் பிரமுகருமான முகேஷ் காத்வி, மக்களின் கல்வித்தர மேம்பாட்டுக்காக, குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக திறம்பட சேவையாற்றியவர்' என்று மீரா குமார் குறிப்பிட்டார்.
அவரது மறைவுக்கும், கொல்கத்தா சந்தைப் பகுதியில் நேர்ந்த தீ விபத்தில் உயிரிழந்த 19 பேருக்கும் இரங்கல் தெரிவித்து அவையில் உறுப்பினர்கள் 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழல் இல்லாத ஆட்சிக்கு அதிகாரிகளின் துணை அவசியம்: உயா்கல்வித் துறை அமைச்சா்

தெருநாய்களை சட்டவிரோதமாக இடமாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு: பிராணி ஆா்வலா்கள் தில்லியில் போராட்டம்

அங்கன்வாடி மையத்தில் தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்






