மேகாலயத்தில் சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக முகுல் சங்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) அவர் முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.
மேகாலயத்தில் மொத்தமுள்ள 60 இடங்களில், காங்கிரஸ் 29 இடங்களைக் கைப்பற்றியது. தனிப்பெரும்பான்மைக்கு 2 இடங்கள் பற்றாக்குறையாக உள்ள போதும், ஆட்சியை காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் காங்கிரஸýக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், 8 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.எஸ். மூஷாஹரியை வெள்ளிக்கிழமை சந்தித்த முகுல் சங்மா ஆட்சியமைக்க அனுமதி கோரினார்.
மேகாலயத்தின் 23 ஆவது முதல்வராகவும், தொடர்ந்து 2ஆவது முறையாகவும் முகுல் சங்மா பதவியேற்கவுள்ளார்.
""வளர்ச்சியில் பின்னடைவு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவோம். மக்களை தீவிரவாதத்துக்கு இட்டுச் செல்லும் முக்கியப் பிரச்னையான வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தீர்ப்பதிலும் தீவிர கவனம் செலுத்தப்படும்.
மக்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்'' என்றார் முகுல் சங்மா.
முகுல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு முதல்வராக இருப்பார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸின் பிரதான எதிரியான பி.ஏ.சங்மாவின் தேசிய மக்கள் கட்சி, காரோ ஹில் பகுதியில் 2 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் 13 இடங்களைக் கைப்பற்றியது.
2008ஆம் ஆண்டு தேர்தலில் சங்மா தேசியவாத காங்கிரஸில் இருந்த போது, காரோ ஹில் பகுதியில் 15 இடங்களை அக்கட்சி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெனால்டியில் கோல் அடித்த மெஸ்ஸி: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!

மீண்டும் போர்? ஜோர்டான், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

அமெரிக்காவில் அனுமதி மறுப்பு... நாடு திரும்பிய உலகக் கோப்பை நடுவருக்கு உற்சாக வரவேற்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!


