வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அப்சல் குரு உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முடியாது: சுஷீல் குமார் ஷிண்டே

தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முடியாது என மத்திய உள் துறை

News image
Updated On :12 மார்ச் 2013, 1:12 am IST

தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முடியாது என மத்திய உள் துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

ஷிண்டே மேலும் கூறியது: கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி தூக்கிலிடப்பட்ட நாடாளுமன்றத் தாக்குதல் பயங்கரவாதி அப்சல் குருவின் உடல் திகார் சிறை வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உடலை ஒப்படைக்க வேண்டும் என குடும்பத்தினரும், ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லாவும் கோரி வருகின்றனர். சிறை விதிகளின்படி குருவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவரது உடலை ஒப்படைக்க முடியாது. எனினும், குருவை அடக்கம் செய்த இடத்தில் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தலாம்.

ஆளுநரை நியமிப்பது அரசின் உரிமை: சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் அஸ்வினி குமாரை நாகாலாந்து மாநில ஆளுநராக மத்திய அரசு சமீபத்தில் நியமித்தது. இதற்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

 இதுகுறித்து ஷிண்டே கூறுகையில், ""யாரை வேண்டுமானாலும் மாநில ஆளுநராக நியமிக்க அரசுக்கு உரிமை உள்ளது. அந்த வகையில் அஸ்வினி குமாரை

ஆளுநராக நியமித்ததில் தவறு இல்லை என்றார்.

அமைச்சரவை சிறப்புக் கூட்டம்:  பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்க வகை செய்யும் குற்றச் சட்டத் திருத்த மசோதா விஷயத்தில் சட்ட ரீதியாக கருத்து வேறுபாடு உள்ளது. இதுகுறித்து செவ்வாய்க்கிழமை நடைபெறும் அமைச்சரவை சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார்.

முன்னதாக, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், ""குற்ற சட்டத் திருத்த மசோதா குறித்து அமைச்சர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆலோசனைகளை கூறி வருகின்றனர். பாலியல் தாக்குதல் என குறிப்பிட வேண்டும் என்று சிலர் கூறிவரும் நிலையில் மேலும் சிலர், பாலியல் பலாத்காரம் என குறிப்பிட வேண்டும் என கூறுகின்றனர்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.