முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

சிரி... சிரி...

உருளைக் கிழங்கில் உப்பு அதிகமா இருக்கு... ரசத்தில் உப்பே இல்லை.

Published On :

உருளைக் கிழங்கில் உப்பு அதிகமா இருக்கு... ரசத்தில் உப்பே இல்லை.''

'உருளைக் கிழங்கை ரசத்தில் முக்கிச் சாப்பிடுங்க... சரியா இருக்கும்!''

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.



'அந்த டாக்டருக்கு குழந்தை மனசுன்னு எதைவச்சி சொல்றே?''

'பீஸூக்குப் பதிலா சாக்லெட்டுங்க கொடுத்தாலும் வாங்கிக்கொள்வாராம்!''

-மஞ்சுதேவன், பெங்களூரு.



'ரயில்ல என்னோட பெட்டி காணாமப் போயிடுச்சு...''

'கவலைப்படாமச் சொல்றீங்களே?''

'நான் எதுக்குக் கவலைப்படணும்... ரயில்வே டிபார்ட்மென்ட்தானே கவலைப்படணும்!''

-தீபிகா சாரதி, சென்னை -5.



'சாம்பார் வடைக்கு வச்ச ஸ்பூன் வேற லெவல்ல இருக்கே?''

'ஆமாம் சார்... வடை மாவையே ஸ்பூன் வடிவில் பொரிச்சு வச்சிருக்கோம்!''



'திருடி முடிச்சு கிளம்பறபோது ஒரு உதவி பண்ணிட்டுப் போ!''

'என்ன உதவி?''

'இந்த பீரோவுக்கு டூப்ளிகேட் சாவி ஒண்ணு வேணும்!''



'எப்ப வந்தாலும் ஏன் கடைசி பஸ்லயே எங்க வீட்டுக்கு வர்றீங்க?''

'மறுநாள் காலை வரை போகச் சொல்ல மாட்டீங்க என்ற ஒரு நம்பிக்கை தான்.'



'பிளேட்டில் கைகழுவக் கூடாது, சார்!''

'நான் கை கழுவல... பிளேட்டைத் தான் கழுவுறேன்!''



'பிரமோஷன் வரும் போல் ஆபீஸ் தூக்கத்தில் கனவு வருதே..?''

'ஆபீஸ்ல கனவா... அப்ப டபுள் பிரமோஷன் தான்!''

- பர்வதவர்த்தினி, பம்மல்.

'ஆச்சரியமா இருக்கே... உனக்கு பாயசம் கூடவா செய்யத் தெரியும்?''

'மைசூர் பாக்குங்க அது... கொஞ்சம் நீர்த்துப் போச்சு!''



'மாமியார்-மாமனாரை உன்கூட கிரவுண்ட் ஃப்ளோரிலும், அப்பா-அம்மாவை நாலாவது மாடியிலேயும் வச்சிருக்கீயே, ஏன்?''

'பெத்து வளர்த்து ஆனாக்கின அப்பா-அம்மாவை உயர்ந்த இடத்துல வைக்கிறதுதானே நியாயம்!''



'சினிமாவுக்குச் சென்ற மன்னர், ஏன் பாதியில் ஓடி வந்து விட்டார்?''

'படம் முழுக்க ஒரே சண்டையாம்!''



'சில பேரைக் கண்டால் மட்டும் இனம் புரியாத வெறுப்பு வருது, சார்!''

'ஆண்களைச் சொல்றீங்களா? பெண்களைச் சொல்றீங்களா?''

'அதான் 'இனம் புரியாத' வெறுப்புன்னு சொன்னேனே, சார்!''



'மாவுல எதுவும் மிஸ்டேக்கான்னு தெரியலை முதலாளி... தோசையெல்லாம் கிண்டிப் போகுது!''

'அதுக்கு என்னய்யா பண்ணலாம்?''

'கைமா தோசைன்னு பேர் வச்சு ஓட்டிடலாம், முதலாளி!''



'மனைவி அடிச்சதுல கன்னம் வீங்கிப் போச்சேன்னு டாக்டர்கிட்ட போய் ஊசி குத்திக்கிட் டேன்...!''

'வீக்கம் குறைஞ்சுதா?''

'கன்ன வீக்கம் தேவலை... ஆனா, ஊசி குத்துனதுலதான் கை வீங்கிப் போச்சு!''



'வெண்பா வேண்டுமா? விருத்தப்பா பாடவா? அல்லது சந்தப்பா பாடவா, மன்னா?''

'எந்தப் பாவாயினும் பரவாயில்லை... சொந்தப் பாவாக இருந்தால் போதும், புலவரே!''



'கொள்ளையர்கள் கிட்டே இருந்து மீட்ட நகைகள்ல ஒரு செயின் குறையுதேய்யா?''

'சாரி சார்... செயின் எனக்கு எப்படி இருக்குன்னு பார்க்க போட்டுக்கிட்டது, கழுத்துலயே தங்கிப் போச்சு, சார்!''

- வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.