தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஹைதராபாத் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட சைக்கிளின் வரைபடம் வெளியீடு

ஹைதராபாதில் நடந்த இரட்டைக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குண்டு வைக்கப் பயன்படுத்தப்பட்ட சைக்கிளின்

Updated On :11 மார்ச் 2013, 7:21 pm

ஹைதராபாதில் நடந்த இரட்டைக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குண்டு வைக்கப் பயன்படுத்தப்பட்ட சைக்கிளின் வரைபடத்தைப் போலீஸார் திங்கள்கிழமை வெளியிட்டனர்.

சைபராபாத் காவல்துறை ஆணையர்  துவாரகா திருமலா ராவ், சைக்கிளின் வரைபடத்தை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது: சைக்கிளின் பின்பக்கம் அதிகளவு சேதமடைந்திருந்ததால், பின்பக்கத்தில் குண்டு வைத்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

சைக்கிளின் பிரதானச்  சட்டம், ஹேண்டில் பார், பம்பர்கள், போர்க் ஆகியவை அட்லஸ் நிறுவன தயாரிப்புகள். முன் சக்கர ரிம் உஷா நிறுவனத்தின் தயாரிப்பு. முன் சக்கரத்தில் பயன்படுத்தப்பட்ட டயர் கங்கா நிறுவனத்தால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தயார் செய்யப்பட்டது. முன் சக்கர டியூப் கங்கா நிறுவனத்தால் கடந்த அக்டோபரில் தயாரிக்கப்பட்டது. சைக்கிளின் செயின், கே.டபிள்யூ, பிரிட்டனில் தயாரானது. இந்த தயாரிப்பானது 3 ஆண்டுகளுக்கு முன் சந்தையில் கிடைத்துள்ளது. அதன் பிறகு உற்பத்தி செய்யப்படவில்லை. பிப்ரவரி 21ஆம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள், குண்டு வெடிப்புக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்க வேண்டும் என்றார்.

"வாடகை வீடு ஏற்பாடு செய்து தரும் முகவர்கள், பயன்படுத்தப்பட்ட சைக்கிளை விற்பனை செய்பவர்கள் உபயோகமான தகவல்களை போலீஸýக்குத் தெரிவிக்க வேண்டும்' என்று துவாரகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.