2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி.) முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவை விசாரிக்காதது பெரும் தவறு என பா.ஜ.க.வின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா குற்றம்சாட்டியுள்ளார்.
புது தில்லியில் திங்கள்கிழமை அவர் தெரிவித்தது: ஜே.பி.சி. தலைவர் பி.சி.சாக்கோவுக்கு முன்னாள் அமைச்சர் ராசா எழுதிய கடிதத்தின் நகல் எனக்கு வந்துள்ளது. கூட்டுக் குழு முன்பு ஆஜராகி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் சாட்சியாக வாக்குமூலம் அளிக்க தான் விரும்புவதாக ராசா மூன்று-நான்கு கடிதங்களை குழுத் தலைவர் சாக்கோவுக்கு எழுதியிருப்பதாக எனக்கு வந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராசாவின் கடிதங்கள் தனக்கு கிடைத்ததாக சாக்கோ பதில் அளித்துள்ளாரே தவிர, வாக்குமூலம் அளிப்பது குறித்து எதுவும் கூறவில்லை என்று எனக்கு வந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராசாவை ஜே.பி.சி. முன்பாக சாட்சியம் அளிக்க அழைக்காதது பெரும் தவறு. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு உண்மையை வெளிக்கொண்டு வருவதை விட்டுவிட்டு, உண்மையை மறைப்பதற்கு பயன்படுத்தப்படலாம்.
இது மிகத் தீவிரமான விஷயம். ஜே.பி.சி. உறுப்பினர்கள் இந்த விவகாரம் குறித்து முழுமையாக அலசுவதற்கு உதவியாக ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று கூறி வருகிறோம். ஆனால், துரதிருஷ்டவசமாக, குழுத் தலைவர் சாக்கோ அப்படியொரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யவில்லை.
உண்மையை மறைக்கும் திசையில் செல்கிறோம் என்று நினைக்கிறேன். அரசின் உத்தேசம் என்னவென்று தெரியவில்லை. நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன்பு வந்து சாட்சியம் அளிக்க விரும்புபவர்களை அழைக்காவிட்டால், எந்த நோக்கத்துக்காக இந்த குழு அமைக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாது.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கும் கடிதம் எழுதுவேன். இந்த விவகாரத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அவர்களுடைய கவனத்துக்கு கொண்டு வருவேன் என்று யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
யஷ்வந்த் சின்ஹாவும் ஜே.பி.சி.வில் இடம்பெற்றுள்ள இடதுசாரி கட்சி உறுப்பினர்களும் ராசாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர்.
ராசாவை விசாரணைக்கு அழைக்காத நிலையில், அவர் கூற விரும்பியவற்றைக் குறிப்பிட்டு ஒரு அறிக்கையை கடந்த மார்ச் மாதம் சாக்கோவுக்கு அனுப்பியிருந்தார். அதற்கு சாக்கோ அளித்த பதில்களை பிற ஜே.பி.சி. உறுப்பினர்களுக்கு ராசா அனுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இபிஎஸ், டி.டி.வி. தினகரன், அன்புமணி இணைந்திருப்பது ஆட்சியமைக்க அல்ல: உதயநிதி

”தனுசு ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சுரேஷ் ரெய்னாவை ஞாபகப்படுத்தும் சர்ஃபராஸ் கான்..! சிஎஸ்கே ரசிகர்களிடையே பெருகும் ஆதரவு!
முற்றிய நெற்கதிரைக் கவனமாக அறுவடை செய்வதுதான் தேர்தல் களப்பணி: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


