கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பி.சி. சாக்கோ மீது திமுக உரிமை மீறல் நோட்டீஸ்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி.) தலைவர் பி.சி. சாக்கோ மீது உரிமை மீறல் நோட்டீûஸ தி.மு.க.

Updated On :22 ஏப்ரல் 2013, 5:03 am IST

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி.) தலைவர் பி.சி. சாக்கோ மீது உரிமை மீறல் நோட்டீûஸ தி.மு.க. அளித்துள்ளது.

இது தொடர்பாக மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கு தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஞாயிற்றுக்கிழமை இரவு அனுப்பியுள்ள கடிதத்தில், "அலைக்கற்றை தொடர்பான வரைவு அறிக்கை, ஜே.பி.சி. உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் முன்பாக ஊடகங்களுக்குக் கசிய விடப்பட்டுள்ளது. மிகவும் ரகசியமான அந்த ஆவணத்தை முறையாக ஜே.பி.சி. கூட்டத்தில்தான் சாக்கோ வழங்கியிருக்க வேண்டும். ஆனால், மிகவும் அலட்சியமாக ஜே.பி.சி. தலைவர் அலுவலகம் செயல்பட்டுள்ளதால்தான் அவரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை வெளியே கசிந்துள்ளது.

இதற்கு முழுப் பொறுப்பை சாக்கோதான் ஏற்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஏற்பட்ட கவனக்குறைவால் சாக்கோ மீது உரிமை மீறல் நோட்டீûஸ அளிக்கிறோம். எனவே, இந்த விவகாரத்தை நாடாளுமன்ற உரிமை மீறல் விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.