நிதி மசோதாக்களை நிறைவேற்ற மக்களவையை அமைதியாக நடத்த உதவுங்கள் என எதிர்க்கட்சிகளுக்கு மக்களவைத் தலைவர் மீரா குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரரும் இலக்கியவாதியுமான கே.எம்.முன்ஷியின் 125-ஆவது பிறந்த நாள் விழாவில் புதன்கிழமை கலந்துகொண்டார் மீரா குமார். அப்போது எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்படுவது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில் விவரம்:
அமளியை ஏற்படுத்தாமல் அமைதியாக மக்களவையை நடத்த உதவும்படி எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். இது பட்ஜெட் கூட்டத் தொடர் என்பதால் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது அவசியம். குறிப்பாக, நிதி மசோதாக்களை நிறைவேற்ற வேண்டியது சட்டப்பூர்வமான ஒன்றாகும். அதற்காக அவையை அமைதியாக நடத்த எதிர்க்கட்சிகள் உதவ வேண்டும் என்றார் மீரா குமார்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கபில் சிபல் மற்றும் மீரா குமார் ஆகியோர் ஏற்பாடு செய்யும் கூட்டங்களை புறக்கணிப்பது என பாஜக எடுத்துள்ள முடிவு பற்றி எழுப்பிய கேள்விக்கு ""பொது இடத்தில் இதை விவாதிக்க முடியாது'' என பதிலளித்தார் அவர்.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்களை சட்டத்தால் மட்டும் தடுத்து நிறுத்திவிட முடியாது. ஒவ்வொருவரும் குடும்ப உறவின் மேன்மைகளைப் புரிந்துகொண்டு கண்ணியத்தோடும் பொறுப்புணர்வோடும் செயல்பட வேண்டும் என்றார் மீரா குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்






