ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு வீட்டுக் காவல்

காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாத தலைவர்கள் பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Updated On :22 மே 2013, 2:20 am IST

காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாத தலைவர்கள் பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீநகரின் ஈத்கா மைதானத்தில் பேரணி நடத்துவதற்காக ஹுரியத் மாநாட்டு அமைப்பைச் சேர்ந்த பிரிவினைவாத தலைவர்கள் திட்டமிட்டனர். அவர்கள் முயற்சியை முறியடிக்கும் வகையில் அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பிரிவினைவாதத் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக ஹுரியத் மாநாட்டு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: ஹுரியத் அமைப்பைச் சேர்ந்த மெüலானா அப்பாஸ் அன்சாரி, ஜாபர் அக்பர் பட், ஷாகிதுல் இஸ்லாம் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

மீர்வாய்ஸ் முகமது ஃபாருக், அப்துல் கனிலோன் உள்ளிட்டோரின் மறைவு தினத்தையொட்டி பேரணி நடத்த ஹுரியத் அமைப்பினர் திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையே ஸ்ரீநகரில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தால் பள்ளிகள், கடைகள், இதர வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்களிலும் குறைந்த அளவு ஊழியர்களே வந்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.