தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை தொடர்பான பிரச்னையில் தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி விரைவில் அறிவிக்கவுள்ளது.
தெலங்கானா விவகாரம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், மத்திய அரசுக்கும், தொடர்ந்து பெரும் பிரச்னையாக நீடித்து வருகிறது. இது விஷயத்தில் காங்கிரஸ் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காதது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. மாநில காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் இருந்து விலகுவது தொடர்கதையாகிறது.
இரு நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் கேசவராவ், இரு எம்.பி.க்கள், தெலங்கானா ராஷ்ட்டிர சமிதியில் இணைந்தனர். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தெலங்கானா குறித்த நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டத்தில் தெலங்கானா விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், ஆந்திர மாநில மேலிட பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத் இதில் பங்கேற்றார். ஆந்திர மாநில சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இது முடிவடைந்த பின்னர், தெலங்கானா குறித்த தனது நிலைப்பாட்டை கட்சி மேலிடம் விரைவில் அறிவிக்கும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெலிகிராம் மூலம் நீட் போலி வினாத்தாள் விற்பனை! ராஜஸ்தானில் ஒருவர் கைது!

கால்பந்து உலகக் கோப்பையில் வரலாற்று வெற்றியாக மாறியாக கனடாவின் முதல் வெற்றி!
நீட் மறுதேர்வு: கோவையைத் தொடர்ந்து சேலம் மாணவி தற்கொலை!
ஐடி பங்குகள் தொடர் விற்பனையால் சென்செக்ஸ் 607 புள்ளிகளுடனும், நிஃப்டி 155 புள்ளிகள் சரிவு!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


