காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று மஜத உறுப்பினர் ஒய்.எஸ்.வி.தத்தா வலியுறுத்தினார்.
கர்நாடக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அவர் பேசியது:
காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசு ஏராளமான தவறுகளைச் செய்துள்ளது. இதனால், இந்த விவகாரத்தில் நமது உரிமைகளைப் பாதுகாக்க இயலாமல் போனது.
ஒரு காலத்தில் மத்தியில், தமிழகத்தில், கர்நாடகத்தில் ஒரே கட்சியின் ஆட்சி இருந்தது. அப்போது இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் சுமுகமான சூழல் இருந்தது. ஆனால், அப்போது மத்திய அரசு இதில் முனைப்புக்காட்டவில்லை என்று காவிரி நடுவர் மன்ற நீதிபதிகள் ரங்கநாத் மிஸ்ரா, பி.டி.சாவர்கர், ராமசாமி ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இப்படி பல்வேறு தவறுகளைச் செய்துள்ளோம். இனிமேலாவது இதுபோன்ற தவறுகள் நடக்காமல், கர்நாடகத்தின் உரிமைகளை, விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க மாநில அரசு செயலாற்ற வேண்டும் என்றார் ஒய்.எஸ்.வி.தத்தா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குன்னூா் அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது: குஷ்பு

துறைமுகம் தொகுதியில் அதிமுகவினா் டோக்கன் விநியோகம்: வழக்கு முடித்துவைப்பு
ஈரோடு கிழக்கு: தக்கவைக்கும் முனைப்பில் காங்கிரஸ்: ‘கை’ப்பற்றும் முனைப்பில் அதிமுக
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

