ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

முதல் சிஆர்பிஎஃப் பெண் கமாண்டோ படை தொடக்கம்

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் உதவுவதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் பட்டாலியனில் (சி.ஆர்.பி.எஃப்) முதன்முதலாக பெண்கள் கமாண்டோ பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2013, 2:05 am IST

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் உதவுவதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் பட்டாலியனில் (சி.ஆர்.பி.எஃப்) முதன்முதலாக பெண்கள் கமாண்டோ பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான், கர்நாடகம், உத்தரபிரதேசம், பிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முப்பது பெண்கள் இப்பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.

குர்கானுக்கு அருகே கதர்பூரில் உள்ள சிபிஆர்எஃப் பயிற்சி மையத்தில் இந்தப் படையினரின் சாகச நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்றுதல், தீவிரவாதிகளை குறி பார்த்துச் சுடுதல், கயிறுகளைப் பயன்படுத்தி தீவிரவாதிகளின் இருப்பிடத்தை அடைதல், மறைந்திருந்து கொரில்லா தாக்குதல் நடத்துதல் முதலானவற்றுக்கான ஒத்திகையை அவர்கள் செய்து காட்டினர்.

முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள சிஆர்பிஎஃப். பைப் பேண்டு குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பெண் கமாண்டோக்களின் சாகச செயல்களைப் பாராட்டி அவர்களுடன் படம் எடுத்துக் கொண்டு, சிஆர்பிஎஃப் இயக்குநர் ஜெனரல் பிரணாய் சாஹே பேசியதாவது:

சிஆர்பிஎஃப் பெண்கள் கமாண்டோ பிரிவு தொடங்கப்பட வேண்டும் என்பது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் விருப்பமாகும். அவரது எண்ணம் இப்போது நிறைவேறி உள்ளது.

துடிப்பும், வீரமும் உள்ள பெண் கமாண்டோக்களுக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நாட்டின் மீது விசுவாசம் உள்ளவர்களாக, தைரியசாலிகளாக, அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்களாக இருக்கின்றனர் என்றார் அவர்.

"நாட்டில் எங்கெல்லாம் மோதல் ஏற்படுகிறதோ, அங்கு உடனடியாக இந்தப் படையினர் அனுப்பப்படுவர்' என்று சிஆர்பிஎஃப் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.