/

பா.ஜ.க.வுக்கு புதிய நண்பர்கள் தேவை: அத்வானி

மக்களவைத் தேர்தலில் காங்கிரûஸத் தோற்கடிக்க, பாஜகவுக்குப் புதிய நண்பர்கள் (கட்சிகள்) தேவை என்று மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :22 ஜூன் 2013, 1:53 am IST

மக்களவைத் தேர்தலில் காங்கிரûஸத் தோற்கடிக்க, பாஜகவுக்குப் புதிய நண்பர்கள் (கட்சிகள்) தேவை என்று மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

ஜன சங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 61ஆவது நினைவு தினத்தையொட்டி, தில்லியில் வெள்ளிக்கிழமை பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அத்வானி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:

ஜனசங்கத்தின் முதல் தேசியக் குழுக் கூட்டம் கான்பூரில் 1952இல் நடைபெற்றது.

கான்பூர் தேசியக் குழுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஒடிசாவைச் சேர்ந்த மாநிலக் கட்சியான கணதந்திர பரிஷத்தின் தலைவர்களை சியாமா பிரசாத் முகர்ஜி அழைத்தார். அப்போது, காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர் அது பற்றிப் பேசினார்.

அவரது சிந்தனை இன்றைய சூழலுக்கும் பொருந்துகிறது. மக்களவைத் தேர்தலில் காங்கிரûஸத் தோற்கடிக்க, பாஜகவுக்குப் புதிய நண்பர்கள் (கட்சிகள்) தேவை என்றார் அத்வானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.