காஷ்மீரில் இளைஞர்கள் இருவர் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து பிரிவினைவாத குழுக்கள் திங்கள்கிழமை விடுத்திருந்த முழு அடைப்புப் போராட்டத்தினால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த மோதலின் போது ராணுவ வீரர்கள் சுட்டதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு ஹுரியத் மாநாடு அமைப்பின் இரு பிரிவுகள், ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி உள்ளிட்ட பிரிவினைவாத அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், இந்த அமைப்புகள் திங்கள்கிழமை முழ அடைப்புப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தன.
இதையடுத்து, காஷ்மீரில் திங்கள்கிழமை முழு அடைப்பு நடைபெற்றது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வங்கிகள், தனியார் அலுவலகங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
சட்டம்-ஒழுங்கை பராமரிக்க பல்வேறு இடங்களில் உள்ளூர் போலீஸ், மத்திய ரிசர்வ் போலீஸ் படை உள்ளிட்ட துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
ராணுவப் பள்ளிக்கு தீவைக்க முயற்சி: பந்திப்போரா மாவட்டத்தில் ஹஜின் என்ற பகுதியில் உள்ள ராணுவப் பயிற்சிப் பள்ளியை தீவைத்து எரிக்க முயற்சி நடந்துள்ளது.
கலவரக்காரர்கள் சிலர் ராணுவப் பயிற்சிப் பள்ளிக் கட்டடத்துக்கு தீவைத்தனர். ஆனால் தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் கட்டடத்துக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. கலவரக்காரர்கள் பாதுகாப்புப் படையினரால் அங்கிருந்து துரத்தி அடிக்கப்பட்டனர் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே, இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, அடையாளம் காணப்படாத ராணுவ வீரர்கள் சிலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இதுபற்றி உயர்மட்ட விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணை கண்துடைப்பு: இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு இருப்பது வெறும் கண் துடைப்பு என்று ஹுரியத் அமைப்பின் தலைவர் செய்யது அலி ஷா கிலானி குற்றம்சாட்டியுள்ளார்.
தவிர்க்கப்பட வேண்டியது: இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார். இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்டது குறித்து, திங்கள்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: இதுபோன்ற சம்பவங்கள் காஷ்மீர் மக்களுக்கும், நாட்டின் மற்றப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கும் இடையே உணர்ச்சிகரமான முறையில் பெரிய விரிசலை ஏற்படுத்தி விடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

