மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பொய்யான வாக்குறுதி அளித்து பெண்ணை ஏமாற்றியவரை நிரபராதி என கூற முடியாது: உச்ச நீதிமன்றம்

திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து பெண்ணின் சம்மதத்துடன் அவருடன்

News image
Updated On :2 ஜூலை 2013, 1:46 am IST

திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து பெண்ணின் சம்மதத்துடன் அவருடன் உறவு கொண்டவரை நிரபராதி என விடுவிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இதில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது பாலியல் பலாத்கார குற்றத்தை சாட்டி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை  எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம், ஜெகதீஸ் சிங் கேஹர் அடங்கிய அமர்வு இவ்வாறு தீர்ப்புக் கூறியுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, பெண்ணுடன் கார்த்திக் பாலியல்ரீதியாக உறவு வைத்துள்ளார். இதுபோன்ற பல முறை நிகழ்ந்துள்ளது. பின்னர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அப்பெண் கூறியபோது, மறுத்துள்ளார். இந்த சம்பவம் 2003-ம் ஆண்டில் நிகழ்ந்துள்ளது. அப்பெண் தரப்பில் போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கார்த்திக் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் கார்த்திக் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு உறதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை கார்த்திக் நாடினார். அங்கும் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

திருமணம் செய்துகொள்வதாக பொய்யாக வாக்குறுதி அளித்து பெண்ணிடம் பலமுறை பாலியல் உறவு கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென்ற அவரது கோரிக்கையை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.