மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ரயில் கட்டணம் உயராது: மல்லிகார்ஜுன கார்கே

டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், ரயில் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என்று மத்திய ரயில்வே

News image
Updated On :2 ஜூலை 2013, 1:50 am IST

டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், ரயில் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என்று மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

கர்நாடகத்தில் செயல்படுத்த வேண்டிய ரயில்வே திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மத்தியில் காங்கிரஸ் அரசின் ஆட்சிக் காலம் இன்னும் 8 மாதங்கள் மட்டுமே இருப்பதால், ரயில் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளேன்.

டீசல் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டாலும், ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் அரசிடம் இல்லை. டீசல் விலை உயர்வால் கூடுதலாக ஏற்படும் செலவை அரசே ஏற்கும். எனவே, ரயில் கட்டணத்தை அரசு உயர்த்தாது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.