ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வங்கி தொடங்க எல்ஐசி, தபால் துறை உள்ளிட்ட 26 நிறுவனங்கள் விண்ணப்பம்

வங்கி தொடங்குவதற்கு உரிமம் கேட்டு எல்.ஐ.சி. வீட்டுவசதி நிதி நிறுவனம், இந்திய தபால் துறை

Updated On :1 ஜூலை 2013, 7:50 pm

வங்கி தொடங்குவதற்கு உரிமம் கேட்டு எல்.ஐ.சி. வீட்டுவசதி நிதி நிறுவனம், இந்திய தபால் துறை உள்ளிட்ட 26 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன என்று ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்திருக்கிறது.

புதிதாக வங்கி தொடங்குவதற்கான வழிமுறைகளை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

தொடர்ந்து, ஜூன் மாதத்தில் இது தொடர்பாக சில விளக்கங்களையும் வெளியிட்டிருந்தது. திங்கள்கிழமை (ஜூலை 1) விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளா

கும்.

இந்த நிலையில், 26 விண்ணப்பங்கள் வந்துள்ளன என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களும் தனியாரும் வங்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளன.

 இதில் குறிப்பிடத் தக்க விண்ணப்பதாரர்கள் எல்.ஐ.சி. வீட்டுவசதி நிதி நிறுவனம் மற்றும் இந்திய தபால் துறையாகும்.

சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கேபிடல், டாடா சன்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ், ஆதித்ய பிர்லா, ரிலையன்ஸ் கேபிடல் உள்ளிட்டவையும் விண்ணப்பித்துள்ளன.

 உரிமம் பெறும் நிறுவனங்கள் 18 மாதங்களில் வங்கியைத் தொடங்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.