அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பயங்கரவாதிகள் சுட்டதில் போலீஸ்காரர் சாவு

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும்

News image
Updated On :2 ஜூலை 2013, 1:34 am IST

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார், 2 பேர் காயமடைந்தனர்.

டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, மத்திய பாதுகாப்பு படையினரும், போலீஸாரும் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனர். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கூறப்படும் வீட்டை சுற்றி வளைத்த போது, இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

பயங்கரவாதிகள் சுட்டதில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஒரு போலீஸ்காரரும், மத்திய பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் காயமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.