பிகாரில் புத்த கயை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக காவலில் வைக்கப்பட்ட ஒரு பெண் உள்பட 4 பேரையும், போதிய ஆதாரமில்லாத காரணத்தால் போலீஸார் விடுவித்தனர்.
இது குறித்து பாட்னா எஸ்.பி. மனு மகராஜ், பி.டி.ஐ. செய்தியாளரிடம் கூறியது:
குண்டு வெடிப்பு நிகழ்ந்த {ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் ஒரு பெண்ணும் மூன்று இளைஞர்களும் புத்த கயை புத்தர் கோவிலுக்கு அருகில் உள்ள ஹோட்டலில் தங்குவதற்காக வந்தனர். அங்கு சுமார் இரண்டு மணிநேரம் மட்டுமே தங்கியிருந்தனர். பின்னர் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் தங்கள் உருவம் பதிவாகியிருப்பதை அறிந்து, அவர்களாகவே சென்று, புத்த கயை நகர காவல்துறைக் காண்காணிப்பாளர் ஜெய்காந்தைச் சந்தித்தனர்.
இதைத் தொடர்ந்து, காவலில் வைக்கப்பட்ட அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். எனினும் அவர்களுக்கு இந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை.
விசாரணையில், உலகப் புகழ்பெற்ற புத்தர் கோவிலைப் பார்ப்பதற்காகவே புத்த கயைக்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். எனினும், குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கோவில் மூடப்பட்டதாக ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்ததால், அறையைக் காலி செய்ததாகவும் அவர்கள் கூறினர்.
அவர்களிடம் என்.ஐ.ஏ. மற்றும் ஐ.பி. உளவுத்துறை நடத்திய விசாரணையிலும் அவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து, அந்த நான்கு பேரும் விடுவிக்கப்பட்டனர் என்றார் மனு மகராஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - விருச்சிகம்

அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
மகளிர் மீதான தாக்குதல்... வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: விஜய்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

