அசாம் சட்டப்பேரவையில் புகையிலை எதிர்ப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து, மாநிலத்தில் சிகரெட், பீடி உள்ளிட்ட புகைக்கும் பொருள்கள் தயாரிப்புக்கும், விற்பனைக்கும் தடைவிதிக்க புதிய சட்டம் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.
அசாம் சட்டப்பேரவையில் புகையிலை எதிர்ப்பு மசோதா (அசாம் சுகாதார சட்டம்-2013) சில மாற்றங்களுடன் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவானது புகையிலை மற்றும் நிகோட்டின் அடங்கிய ஜர்தா, குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருள்களை உற்பத்தி செய்யவும், வர்த்தகப்படுத்தவும், விளம்பரம் செய்யவும், இருப்பு வைக்கவும், விநியோகிக்கவும், விற்பனை செய்யவும், நுகரவும் தடை விதிக்க வழிசெய்கிறது.
இதுகுறித்து மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஹிமான்டா பிஸ்வா சர்மா குவாஹாட்டியில் பத்திரிகையாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி வருமாறு: புகையிலை எதிர்ப்பு மசோதாவை அமல்படுத்துவதுதான் அரசின் முதல் குறிக்கோள் ஆகும். இதை வெற்றிகரமாக செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, சிகரெட், பீடி உள்ளிட்ட புகைப் பொருள்களுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளோம். இது எப்போது கொண்டுவரப்படும் என்று கூற முடியாது. ஆனால் ஒருநாள் வந்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை.
நாட்டில் அமலில் உள்ள பொது இடத்தில் புகைப் பிடிப்பதை தடுக்கும் சட்டத்தில், அதன் பொறுப்பு நுகர்வோர் மீது விழுகிறது. ஆனால், இந்த சுகாதார சட்ட மசோதாவை பொருத்தவரை அதன் பொறுப்பு உற்பத்தியாளர்கள் மீது சுமத்தப்படும்.
அசாமில் இந்த மசோதா நடைமுறைக்கு வந்த பிறகு, மற்ற மாநிலங்களுக்கும் இந்த மசோதாவை கொண்டுசெல்ல வலியுறுத்தப்படும் என்றார் சர்மா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆற்காட்டில் தீ விபத்து! கணவன்- மனைவி பலி!

தமிழ்ப் புத்தாண்டு: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

