அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. புதன்கிழமை வர்த்தகத்தின் போது ரூபாயின் மதிப்பு ரூ.64.45 ஆக சரிந்தது.
இறக்குமதியாளர்களுக்கும், வங்கிகளுக்கும் டாலரின் தேவை அதிகரித்ததே ரூபாயின் மதிப்பு வெகுவாகக் குறைந்ததற்கு முக்கியக் காரணம். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தையில் பங்கு விலைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 340 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,905 புள்ளிகளில் நிலைகொண்டது. இது கடந்த 11 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியாகும்.
ரூபாயின் மதிப்பு செவ்வாய்க்கிழமை 63.45 ஆக இருந்தது. புதன்கிழமை அன்னியச் செலாவணி வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ரூபாய் வீழ்ச்சியடையத் தொடங்கியது. பிற்பகல் 2.45 மணியளவில் ரூ.64.45 என்ற மிகக் குறைந்த அளவை எட்டியது. ரூபாயின் மதிப்பில் கடுமையான ஏற்ற இறக்கம் இருப்பதை சரி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டது. எனினும் அவை எதிர்பார்த்த அளவு பலனளிக்கவில்லை.
பவுண்டுக்கு நிகரான மதிப்பு ரூ.101.3: பிரிட்டிஷ் பவுண்டுக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சியை சந்தித்தது. பவுண்ட்டுக்கு
நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.101.3 என்ற
சரிவை புதன்கிழமை எதிர்கொண்டது. முன்னதாக
செவ்வாய்க்கிழமை, பவுண்டுக்கு நிகரான ரூபாயின்
மதிப்பு ரூ.100.52 ஆக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

அதிரடி சதமடித்து சல்யூட்..! பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


