மக்கள் தங்கம் வாங்குவதைக் கட்டுபடுத்தும் நோக்கில், வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன் தொகையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கம் வாங்கக்கூடாது என்று நிபந்தனை விதிக்கத் தொடங்கியுள்ளன.
தனிநபர் கடன்களுக்குக் கூட இந்த நிபந்தனை பொருந்தும் என்று வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிப்பதற்காக தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள வழிமுறைகளின்படியே இந்த நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
இந்த விதிமுறைகளின்படி கடன் பெறுபவர்கள் அந்தத் தொகையைக் கொண்டு தங்கத்தை கச்சாத் தங்கமாகவோ, கட்டிகள், ஆபரணங்கள், காசுகளாகவோ வாங்கக்கூடாது என்றும், தங்க மாற்று வர்த்தக நிதி, தங்க மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளே விற்பனை செய்யும் தங்க நாணயங்களையும் 50 கிராமுக்கு மேல் வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக தொண்டா்களை விலைபேச முயற்சி! முன்னாள் அமைச்சா் கு.ப. கிருஷ்ணன்!

தோ்தலில் விதிமுறைப்படியே பணத்தைச் செலவிட வேண்டும்: செலவினப் பாா்வையாளா்கள்

ஏப்.14இல் மலைக்கோட்டையில் திருப்புகழ் திருப்படித் திருவிழா

மின்சார காா்களுக்கு 100 சதவீத சாலை வரி தள்ளுபடி: தில்லி மின் வாகன கொள்கை வரைவில் தகவல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

