அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

தோல்வியடைந்த பொருளாதார நிபுணர் பிரதமர் மன்மோகன் சிங்: பாஜக தாக்கு

பிரதமர் மன்மோகன் சிங், தோல்வியடைந்த பொருளாதார நிபுணர் என்று பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2013, 2:21 am IST

பிரதமர் மன்மோகன் சிங், தோல்வியடைந்த பொருளாதார நிபுணர் என்று பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது.

இது குறித்து பாஜக மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதற்கு பிரதமர் மன்மோகன் சிங்தான் பொறுப்பு. அவர் தோல்வியடைந்த பொருளாதார நிபுணர் ஆவார்.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம், திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் தோல்வியடைந்து விட்டனர். எனது கண்ணோட்டத்தில் அவர்கள் பொருளாதார நிபுணர்களே இல்லை. அல்லது பயனற்ற, மோசமான பொருளதார நிபுணர்கள் என்று கூறலாம். நாட்டை ஆளும் உரிமையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இழந்து விட்டது. தேசிய ஊரகவேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், உணவுப் பாதுகாப்பு மசோதா போன்றவை நாட்டின் நிதி நிலை மோசமடைவதற்கு வழிவகுக்கும். இவற்றால் பணவீக்கம் உயரும் என்றார் முரளி மனோகர் ஜோஷி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.