சாமியார் ஆசாராமிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவேண்டும் என்று அவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 16 வயதுப் பெண்ணின் தந்தை, கோரியுள்ளார்.
""ஆசாராம் பாபுவை பலர் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள். அவர் மீது குற்றம் இல்லை என்றால் அவர் ஏன் உண்மை கண்டறியும் சோதனையை சந்திக்கக் கூடாது?
இந்த வகையான சோதனைகள்தான், உண்மையை உலகத்துக்குத் தெரியப்படுத்தும். இந்த விவகாரத்தில் நாங்கள் எந்த விசாரணைக்கும் உட்படத் தயார்.
சிபிஐ இந்த வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும். உண்மை வெளிவர வேண்டும் என்றால் ஆசாராமின் ஆதரவாளர்களும் இதே கோரிக்கையை எழுப்ப வேண்டும்'' என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









