தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில்: 8 நாள்கள் பகுதியளவு ரத்து

விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில்: 8 நாள்கள் பகுதியளவு ரத்து

News image

ரயில் - (கோப்புப்படம்)

Updated On :14 ஜூன் 2026, 7:43 am IST

விழுப்புரம்-திருப்பதி இடையே விரைவு ரயில் வரும் ஜூன் 19 முதல் ஜூலை 13-ஆம் தேதி வரை காட்பாடியுடன் பகுதியளவு ரத்து செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை ரயில்வே கோட்டத்தில் திருப்பதி, காட்பாடி இடையே தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக வரும் 19, 22, 26, 29 மற்றும் ஜூலை 3, 6, 10, 13 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து காலை 5.40 மணிக்குப் புறப்பட்டு திருப்பதி செல்லும் விரைவு ரயில் காட்பாடியுடன் நிறத்தப்படும்.

மறுமாா்க்கத்தில் அந்த நாள்களில் பிற்பகல் 1.40 மணிக்கு திருப்பதில் இலிருந்து புறப்பட வேண்டிய விரைவு ரயில் காட்பாடியில் இருந்தே புறப்பட்டு விழுப்புரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.