வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தெலங்கானாவுக்கு எதிர்ப்பு: கிருஷ்ணா மாவட்டத்தில் பந்த்

ஆந்திர மாநிலத்தைப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் பந்த் நடத்தியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Updated On :11 செப்டம்பர் 2013, 11:05 pm IST

ஆந்திர மாநிலத்தைப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் பந்த் நடத்தியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஆந்திராவின் அரசு அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் கிருஷ்ணா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த மாவட்டத்தின் அரசியல் கூட்டு நடவடிக்கை குழு, விஜயவாடா வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் கூட்டமைப்பு, வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு, லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பந்த்தில் பங்கேற்றன.

ஏற்கெனவே, அந்த மாநில அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகள், ஓட்டல்கள், சிற்றுண்டிகள் மற்றும் அனைத்து வியாபார நிறுவனங்களும் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து கடைகளை மூடியிருந்தனர். கல்வி நிறுவனங்களும் விடுமுறை அளித்தன. பந்த்தின்போது, அரசியல் கூட்டு நடவடிக்கைக்குழுவினர் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.