வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தில்லி திரும்பினார் சோனியா

அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை அதிகாலையில் தில்லி திரும்பினார்.

News image
Updated On :12 செப்டம்பர் 2013, 12:55 am IST

அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை அதிகாலையில் தில்லி திரும்பினார்.

சில நாள்கள் ஓய்வெடுத்த பிறகு வழக்கமான கட்சிப் பணிகளை சோனியா காந்தி மேற்கொள்வார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக சென்ற சோனியா, தற்போது உடல் நலத்துடன் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் உணவுப் பாதுகாப்பு மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்ற வேளையில், சோனியாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இருந்து பாதியிலேயே புறப்பட்ட சோனியா, எய்ம்ஸ் மருத்துவமனையின் இதய நோய் பிரிவில் சுமார் ஐந்து மணி நேரம் சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில், தனது மகள் பிரியங்காவுடன் சோனியா காந்தி அமெரிக்காவுக்கு செப்டம்பர் 2-ஆம் தேதி புறப்பட்டார்.

எனினும், அவரது உடல் நலக்குறைவு குறித்தும், அவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறித்தும் காங்கிரஸ் கட்சியும், அமெரிக்க மருத்துவமனை நிர்வாகமும் வெளியிடவில்லை.

இதற்கு முன்பும், நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் சோனியா சிகிச்சை பெற்றுள்ளார். அதே மருத்துவமனையில் தற்போதும் அவர் சிகிச்சை பெற்றதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.